FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on August 24, 2013, 02:39:45 PM
-
உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
உப்பு,
பெருங்காயம்
மிளகு
தேங்காய் 1 மூடி
எண்ணை பொரிக்க தேவையான அளவு
உளுந்து,துவரம்பருப்பு அரிசி மூன்றையும் 20 நிமிடங்கள் தனித்தனியாக ஊறவைக்கவும். முதலில் உளுந்தை மிக்ஸியில் போட்டு பாதி மசிந்ததும் துவரம் பருப்பு,அரிசி, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். தேங்காயை பொடியாக நறுக்கி வைக்கவும் . மிளகை ஒன்றிரண்டாக உடைக்கவும்.அரைத்த மாவுடன் தேங்காய், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து வைக்கவும்
கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் மாவை சிறு சிறு உருண்டைகளாக பொரித்தெடுக்கவும்.
தேங்காய் சட்னையுடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்