FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on August 24, 2013, 01:50:58 PM
-
கோவக்காய் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
தேங்காய் துருவல் - கால் கப்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
கோவக்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், சோம்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு 30 நொடி வதக்கவும்.
பிறகு அதில் கோவக்காயை போட்டு வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி பிரட்டி விடவும்.
அதில் தேங்காய் விழுதை சேர்த்து மேலும் அரை கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் கழித்து பிரட்டி விடவும்.
தீயை குறைத்து வைத்து காய் நன்கு வேகும் அளவுக்கு கிளறி கொண்டே இருக்கவும்.
20 நிமிடம் அப்படியே வைத்து தண்ணீர் வற்றும் வரை இடையிடையே கிளறி கொண்டே இருக்கவும்.
20 நிமிடம் கழித்து தண்ணீர் முழுவதுமாக வற்றி கெட்டியாக ஆனதும் அடுப்பில் இருந்து இறக்கவும். சுவையான கோவக்காய் வறுவல் ரெடி. இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. லெஷ்மி அவர்கள்
-
1. கோவக்காய் - 1/4 கிலோ
2. வெங்காயம் - 1/2
3. தக்காளி - 2 துண்டு
4. கறிவேப்பிலை
5. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
6. சீரகம் - 1/2 தேக்கரண்டி
7. கடலை பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
8. எண்ணெய்
9. சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
10. உப்பு
11. கடுகு - 1/2 தேக்கரண்டி
வெறும் கடாயில் கடலை பருப்பை வறுக்கவும். வறுத்த கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், சீரகம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து மிக்சியில் பொடியாக்கவும்.
எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து சிறிது கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, நறுக்கிய கோவக்காய் சேர்த்து வதக்கவும்.
பின் சாம்பார் தூள் சேர்த்து எண்ணெயில் பிரட்டி, உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு மூடி வேக விடவும்.
கோவக்காய் வெந்து நீர் இல்லாமல் வரும்போது பொடியை தூவி கலந்து எடுக்கவும்.
Note:
தயிர் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன்.
-
கோவைக்காய் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
பூண்டு - இரண்டு பற்கள்
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
கடுகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஆறு எண்ணிக்கை
சோம்பு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - ஒரு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கோவைக்காயை நன்கு கழுவிக்கொண்டு மெல்லிய வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, சோம்பு, கறிவேப்பிலை போட்டு பொரிந்தவுடன் நசுக்கிய பூண்டு, வெங்காயத்தை போட்டு வறுக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள காய்களை போட்டு அதை தொடர்ந்து உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூளை போட்டு நன்கு கிளறவும். காய்கள் நன்கு சுருள வெந்ததும் தேங்காய்ப்பூவை தூவி விட்டு இறக்கிவிடவும்.