FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on August 24, 2013, 01:48:30 PM

Title: நூல்கோல் மசாலா
Post by: kanmani on August 24, 2013, 01:48:30 PM

    நூல்கோல் - 2
    பச்சை பட்டாணி - 1 கப்
    சோயா - 10
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    மிளகாய் தூள் - 1 tsp
    தனியா தூள் - 1 tsp
    மஞ்சள் தூள் - 1/4 tsp
    எள் - 1 tsp
    கெட்டி புளி கரைசல் - 1 tbsp
    தேங்காய் துருவல் - 2 tbsp
    எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பில்லை - தாளிக்க
    கொத்தமல்லி - 1/4 கட்டு
    புதினா - 20 இலை
    உப்பு - தேவையான அளவு

 

    நூல்கோலை சிறிய சதுரமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
    சோயாவை சுடு நீரில் இருபது நிமிடமாவது ஊறவைத்து பிழிந்து எடுத்து வைக்கவும்.
    கச கசாவை சூடான பாலில் ஊறவைக்கவும்.
    தக்காளியை சூடுநீரில் போட்டு தோலுரித்து விதையை நீக்கி வைக்கவும்.
    வெறும் வாணலியில் எள் போட்டு பொரிந்ததும், வெங்காயம், தேங்காய் துருவல், புதின கொத்தமல்லி சேர்த்து வதக்கி ஆறவைத்து அரைத்து வைக்கவும்.
    எண்ணெய் சூடானதும் தாளிக்க கூறியவற்றை தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
    ஏற்கனவே வதந்கிதால் சீக்கிரமே வெந்து விடும்.
    உடனே தக்காளி கூழ் சேர்த்து வதக்கவும்.
    பிறகு நூல்கோல், பட்டாணி, சோயா சேர்த்து வதக்கி எல்லா தூளை சேர்த்து வதக்கவும்.
    உப்பு மற்றும் புளிகரைசல் சேர்த்து தேவைபட்டால் அரை கப் தண்ணீர் சேர்த்து காய் வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
    வித்தியாசமான நூல்கோல் கிரேவி தயார்.

Note:

சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன். சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதத்துடனும் சாப்பிடலாம். சூடு சாதத்தில் சேர்த்து சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.