-
பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த 10 உணவுகள்
செரிமான மண்டலத்தில் மிகப்பெரிய உறுப்பு தான் பெருங்குடல். இது நீர், சோடியம் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் போன்றவற்றை உறிஞ்சும். எனவே இத்தகைய பெருங்குடலை சுத்தப்படுத்துவது என்பது மிகவும் அவசியமானது. இதனால் செரிமான மண்டலம் சீராக இயங்குவதோடு, பெருங்குடல் புற்றுநோய் வராமலும் தடுக்கும்.
ஆனால் பெருங்குடல் சுத்தமாக இல்லாவிட்டால், டாக்ஸின்கள் குடலில் தங்கி, கழிவுகளை சரியாக வெளியேற்றாமல் இருக்கும். இதனால் உடல் எடையை குறைக்க முயலும் போது தடை ஏற்படும். அதுமட்டுமின்றி பெருங்குடலில் கழிவுகள் அதிகம் இருந்தால், மலச்சிக்கல், முறையற்ற குடலியக்கம், செரிமான பிரச்சனை போன்றவையும் ஏற்படும். இதற்காக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் குணமாகும் அல்லவா என்று கேட்கலாம். ஆனால் அதுமட்டும் போதாது, பெருங்குடலையும் சுத்தம் செய்யும் உணவுகளையும் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் கழிவுகள் அனைத்து எளிதில் வெளியேறிவிடுவதோடு, செரிமான மண்டலமும் சீராக இயக்கும்.
மேலும் பெருங்குடல் சுத்தமாக இருந்தால், சருமமும் பொலிவோடு இருக்கும். இப்போது அத்தகைய பெருங்குடலை சுத்தம் செய்யும் உணவுகள் என்னவென்று பார்த்து, உணவில் சேர்த்து உடலையும், சருமத்தையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாமா!!!
ப்ராக்கோலி முளைப்பயிர்கள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366178764-broccolisprouts.jpg&hash=f5ea68d1c12ed42716854c7767ea41fbfe31d06b)
கல்லீரலை சுத்தம் செய்யவும், செரிமானத்தை சீராக நடத்தவும், ப்ராக்கோலி முளைப்பயிர்கள் சிறந்தது. இத்தகைய முளைப்பயிர்கள் குடலில் தங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றவும் உதவியாக உள்ளது.
-
எலுமிச்சை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366178779-lemon.jpg&hash=387b6696ba3d96b9718f423d91d258906a00f532)
சிட்ரஸ் பழங்களில், சுத்தம் செய்வதற்கு சிறந்த பொருள் என்று சொன்னால், அது எலுமிச்சை தான். எனவே தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை பருகினால், குடல் சுத்தமாகி, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் எளிதில் வெளியேறிவிடும்.
-
பசலைக் கீரை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366178796-spinach.jpg&hash=e16362e958045a28f01da041b85a05a8a3958fdd)
பச்சை இலைக் காய்கறிகளில் பசலைக் கீரையில், குடலை சுத்தம் செய்து, செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும் தன்மை அதிகம் உள்ளது.
-
பூண்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366178813-garlic.jpg&hash=c70585db3d898b40a8f3d97979cfae926e17784e)
பூண்டின் மணம் கெட்டதாக இருக்கலாம். ஆனால் அவற்றை சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, பெருங்குடலை சுத்தம் செய்யும் உணவுப் பொருட்களிலும் ஒன்றாக உள்ளது.
-
பழச்சாறு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366178833-fruitjuice.jpg&hash=34e87c6d469145fe57e740e2c7e0e8861f8aec40)
தினமும் பழச்சாற்றை பருக வேண்டும். ஏனெனில் அதில் நார்ச்சத்து, நொதிகள் மற்றும் சுத்தம் செய்யும் உப்புக்கள் இருப்பதால், செரிமான மண்டலத்தை சுத்தம் செய்து, கழிவுகளை வெளியேற்றும்.
-
மீன்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366178852-fish.jpg&hash=b2d795dd6c7f467cdecaa51e621e3150a5697b1b)
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் எண்ணெய்கள் இருப்பதால், அவை செரிமானத்தை அதிகரித்து, செரிமான மண்டலத்தை சரியாக இயங்க வைக்கும்.
-
முழு தானியங்கள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366178870-grains.jpg&hash=4ae183ca7335de7ed5121638fbd693ed941ee1b2)
தானியங்களில் குறைவான அளவில் கலோரிகள், கொலஸ்ட்ரால் மற்றும் அதிகப்படியான நார்ச்சத்து நிறைந்துள்ளதால், அதனை உணவில் சேர்த்தால், குடல் சுத்தமாவதோடு, செரிமான மண்டலமும் நன்கு இயங்கும்.
-
அவகேடோ
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366178887-avocado.jpg&hash=c9a69fda3e5077367bf79846d916a7f19ce19c21)
அவகேடோவிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. எனவே இதனையும் உணவில் சேர்த்து வந்தால், குடலை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளலாம்.
-
பருப்புகள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366178904-legumes.jpg&hash=81aea6e72978afaa6d84f917e16bdd83cc97bddf)
பருப்பு வகைகள் மற்றும் காராமணி செரிமானத்தை மட்டும் அதிகரிக்காமல், குடலை சுத்தம் செய்யவும் உதவியாக உள்ளது. எனவே இத்தகைய உணவுப் பொருட்களையும் மறக்காமல் டயட்டில் சேர்த்துக் கொள்ளவும்.
-
க்ரீன் டீ
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366178922-greentea.jpg&hash=3c48b1f6d375149080516cff073857c673ce1b6a)
குடலை சுத்தம் செய்ய க்ரீன் டீ குடிக்க வேண்டும். இவ்வாறு க்ரீன் டீ குடித்தால், குடல் சுத்தமாவதோடு, உடல் எடையும் குறையும்.