FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 22, 2013, 08:27:04 PM

Title: ~ கல்லீரலில் உள்ள கொழுப்பை கரைக்க வேண்டுமா? ~
Post by: MysteRy on August 22, 2013, 08:27:04 PM
கல்லீரலில் உள்ள கொழுப்பை கரைக்க வேண்டுமா?

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Futamil.info%2Fwp-content%2Fuploads%2F2013%2F08%2Fdrinking_coffee_0012-e1377101239937.jpg&hash=f66821dbb4ca820e6b28f8db819ae527c566b3e2)


தினமும் நான்கு கோப்பை காபி, தேநீர் குடித்தால் கல்லீரலில் உள்ள தேவையற்றகொழுப்புகள் கரையும் என சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிங்கப்பூர் டியூக் தேசிய பல்கலைகழகத்தின் மருத்துவ துறை ஆராய்ச்சியாளர்களே இதனை கண்டுபிடித்துள்ளனர்.

உலக அளவில் நீரிழிவு மற்றும் உடற்பருமன் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள 70 சதவிகித மக்களுக்கு கல்லீரலில் கொழுப்பு சேருவது முக்கிய பிரச்னையாக இருக்கிறது.

இவ்வாறு சேரும் கொழுப்பை அகற்ற சரியான சிகிச்சைகள் இல்லை என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றால் தான் இதனைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வுக்காக கொழுப்பு நிறைந்த உணவை எலிகளுக்கு கொடுத்த விஞ்ஞானிகள், பின் அதற்கு காபியையும் உட்செலுத்தினர்.

இது கல்லீரலில் சேரும் தேவையற்ற கொழுப்புக்களை கரைப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானி பால் யென் கூறுகையில், காபியில் உள்ள காபின் நம் உடலில் எப்படி செயல்படுகிறது என்பது பற்றி விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.

இதன் முடிவுகள் மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. காபி, தேநீர் ஆகியவற்றை குடிப்பதால் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என தவறாக சொல்லப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மதுப் பழக்கம் இல்லாதவர்களுக்கு கல்லீரலில் உள்ள கொழுப்பை அகற்றுவதில் காபி- தேநீர் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.