FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழன் on August 22, 2013, 02:10:40 PM
-
கணவனே கண்கண்ட தெய்வம்
கல்லானாலும் கணவன்
அவளுக்கு அவன் தான்
கடவுள்
கணவனும் கடவுளும் ஒன்று தான்
இரண்டும் கல்லின் வடிவம்
கரம் தொட்ட நாள் முதலாய்
கண்ணீர் பூக்களால் அர்ச்சிக்கிறாள்
அவள் கடவுள் கரையவில்லை
அவள் தான் கரைந்து விட்டாள்
கரைந்து கரைந்து
உருகி உருகி பின்
இறுகி அவளே கல்லானாள்
இன்று
அவள் ஒரு அம்மிக்கல்
அவன் கொடுத்த பரிசு
அவள் மடியில் ஒரு குழவிக்கல்
-
நல்ல கவிதை நண்பா. ஆனால் இப்போ நிலைமையே வேற. ஆண்கள்தான் கண்ணீர் வடிக்கும் காலம்.
-
நல்ல முயற்சி நண்பரே மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
தர்ஷன்
-
இன்று
அவள் ஒரு அம்மிக்கல்
அவன் கொடுத்த பரிசு
அவள் மடியில் ஒரு குழவிக்கல்
nice lines brother .. kaalangal evalodhaan maarinalum indrum ippadiyana aangalum pengalum irukathanae seigiraargal