FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 21, 2013, 09:12:33 PM

Title: ~ உடல், முகம் அழகு பெற இயற்க்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on August 21, 2013, 09:12:33 PM
உடல், முகம் அழகு பெற இயற்க்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn2/1157539_599336060088713_1456505163_n.jpg)


மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி 5 கிராம் அளவு ஒரு வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர மேனி பொன்நிறமாக மாறும்.

ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிட்டாலும் தேகம் பொன்னிறமாகும்.

நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்தை ஆலிவ் எண்ணெயில் பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக ஆகும்.

முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவி வர முகச் சுருருக்கம் மறையும்.

இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் மினுமினுப்பாகும்.

அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்குப் பின் சாப்பிட்டு வந்தால் உடல் பளபளப்பாக இருக்கும்.

முருங்கை பிசின் பொடி செய்து அரை ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வனப்பு பெறும்.

சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உரைத்து பூசி வந்தால் முகம் வசீகரத் தோற்றத்தைப் பெறும்.

கானாவாழை, மாவிலை சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பிரகாசமடையும்.

ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாக மாறும்.

மருதாணி இலையை அரைத்து கருப்பு தோல் மீது தேய்த்து வந்தால் கருப்பு நிறம் மாறி வழவழப்பாகும்.

வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி பின்னர் குளித்து வந்தால் உடல் சிவப்பாக மாறும்.

கோரைக் கிழங்கு பொடி தேனில் சாப்பிட்டு வர உடல் பொலிவு உண்டாகும்.

அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகி வர உடல் அழகும், முக அழகும் கூடும்