FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழன் on August 21, 2013, 06:35:46 PM

Title: என் மனைவி
Post by: தமிழன் on August 21, 2013, 06:35:46 PM
எல்லாம் மாறி விட்டன
 
மகன் தோளுக்கு  மேல் வளர்ந்து
தோழன் ஆகிவிட்டான்

மகள் வளர்ந்து
அடுத்த வீட்டார் மருமகள் ஆகிவிட்டாள்

இன்னும் உறக்கத்தின் நடுவே
நான் முனகும் போது
தட்டிக் கொடுத்து தாயாக மாறிய
என் மனைவி மட்டும்
அப்படியே இருக்கிறாள்
இன்னும் மாறாமல்
 
Title: Re: என் மனைவி
Post by: kanmani on August 24, 2013, 10:42:12 PM
இன்னும் உறக்கத்தின் நடுவே
நான் முனகும் போது
தட்டிக் கொடுத்து தாயாக மாறிய
என் மனைவி மட்டும்
அப்படியே இருக்கிறாள்
இன்னும் மாறாமல்

.. unmaiyana varigal brother