-
சிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா? இத ட்ரை பண்ணுங்க
புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலும் எப்போதும் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது கருமையான உதட்டைப் பார்த்து கவலைப்படுகிறீர்களா? அப்படியெனில் முதலில் சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சிகரெட் தான். அதிலும் இத்தகைய கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு நீண்ட நாட்களாக சிகரெட் பிடிப்பதே காரணம்.
ஏனெனில் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் என்னும் அல்கலாய்டு தான், உதடுகளை கருமையாக்குகின்றன. அதுமட்டுமின்றி, சிகரெட் பிடிக்கும் போது, இரத்தக் குழாய்கள் கடினமாகி, ஆக்ஸிஜனை எடுத்துத் செல்லும் இரத்த அணுக்களின் அளவும், இரத்த ஓட்டமும் குறைந்து, முகம் மற்றும் உதட்டிற்கு செல்லும் சீரான இரத்த ஓட்டம் தடைபட்டு, நிறமானது மங்கிவிடுகிறது. மேலும் சிலருக்கு முகத்தில் வறட்சியுடன், சருமமானது வெளுத்து, ஆங்காங்கு ஒருவித புள்ளிகளுடன் இருக்கும். இதற்கு சிகரெட்டின் இருக்கும் நிக்கோட்டின் இரும்புச்சத்து உடலில் உறிஞ்சுவதை தடுத்து, சருமத்தின் இயற்கையான நிறத்தை இழக்கச் செய்கிறது.
எனவே இத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தடுப்பதற்கு முதலில் சிகரெட் பிடிப்பதை தவிர்த்து, உதட்டின் கருமையைப் போக்கும் ஒருசில நல்ல பலனைத் தரும் இயற்கைப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். அந்த பொருட்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம், அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதனை தவறாமல் பின்பற்றி வந்தால், உதட்டில் உள்ள கருமை நீங்கி, உங்கள் துணையிடம் நீங்கள் போய் முத்தம் கேட்பது போய், அவர்களே வந்து முத்த மழையைப் பொழிவார்கள்.
தேன்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366185679-honeyss-600.jpg&hash=52d19be4e8698742588ebdf03a6ba6168feaa789)
மருத்துவ குணம் அதிகம் நிறைந்த தேனும் உதட்டில் உள்ள கருமையை போக்க உதவும். அதற்கு பாதாம், ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை நன்கு அரைத்து, உதட்டில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடு பொலிவாக இருக்கும்.
-
பாதாம் பால்/பாதாம் எண்ணெய்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366185765-almonoil-2-600.jpg&hash=56a83b2dc8d6db716b426e8ae2e9c25cfa921172)
தினமும் உதட்டிற்கு பாதாம் பால் அல்லது பாதாம் எண்ணெயை பலமுறை தடவ வேண்டும். இதனால் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் வறட்சியின் காரணமாக உண்டாகும் கருமை நிறத்தை மாற்றலாம்.
-
மாதுளை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366185844-pomegranates-600.jpg&hash=417d55d4577271640c6cf31f7651cdc282df7c38)
மாதுளை சாற்றினை தினமும் இரவில் படுக்கும் போது தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமையை போக்கலாம்.
-
எலுமிச்சை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366186534-lemsa-600.jpg&hash=d3b1db8290ecb60f9b85e468ee66548fd7656fb2)
எலுமிச்சை ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருள். இத்தகைய எலுமிச்சையின் சாற்றை மட்டும் உதட்டில் தடவி 4-5 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவி, இறுதியில் லிப்-பாம் போட்டுக் கொண்டால், உதட்டில் இருக்கும் கருமை நீங்கும்.
-
தயிர்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F18-1366280937-curd-600.jpg&hash=2b6755ce848eacdd7e8b9095e17f06d4cfea661e)
பொதுவாக கருமையைப் போக்க தயிர் சிறந்த பொருள். அதிலும் உதட்டில் உள்ள கருமையை போக்குவதற்கு, தயிரை உதட்டில் தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் உதட்டில் உள்ள கருமை நீங்கி, மென்மையாக இருக்கும்.
-
வெண்ணெய்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366186065-yogurt-600.jpg&hash=84fc41d881bbd15d1e82464a58780d051ed3de9d)
கருமையான உதடுகள் இருப்பதற்கு வறட்சியும் ஒரு காரணம். எனவே வறட்சியைப் போக்குவதற்கு உதட்டிற்கு வெண்ணெய் தடவி வந்தால், உடனே உதட்டின் வறட்சி நீங்கி, நிறம் மாறுவதைக் காணலாம்.
-
கிளிசரின்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366186671-glycerines-600.jpg&hash=784e1f48649d970e3eed36dd7dfdf2f39b3d2b4f)
கிளிசரின் ஒரு லிப்-பாம் போன்றது. எனவே கெமிக்கல் கலந்த லிப்-பாமை பயன்படுத்துவதற்கு பதிலாக, கிளிசரினைத் தடவி வந்தால், கிளிசரின் உதட்டை நீண்ட நேரம் ஈரப்பசையுடன் வைத்து, உதட்டின் கருமையையும் போக்கும்.
-
சர்க்கரை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366186196-sugars-6003.jpg&hash=678dbe4cf7a323e0dce8ad6a6ca011de1e4dbcf8)
உதட்டிற்கு ஸ்கரப் செய்வதற்கு சர்க்கரை சிறந்த பொருள். அதிலும் சர்க்கரையை தேனுடன் சேர்த்து கலந்து, ஸ்கரப் செய்தால், சர்க்கரை உதட்டில் உள்ள இறந்த செல்களை நீக்கியும், தேன் ஈரப்பசையையும் கொடுக்கும்.
-
பீட்ரூட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366186259-beetrootds-600.jpg&hash=9142d882613d0869e3c5f9ab3b341dd762a000c3)
பீட்ரூட் உதட்டில் உள்ள கருமையை தற்காலிகமாக மறைக்கவும், நிரந்தரமாக போக்கவும் உதவும் ஒரு பொருள். அதற்கு தினமும் பீட்ரூட் துண்டை உதட்டில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவினால், உதடு நாளடைவில் அழகான நிறத்தை பெறும்.
-
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366186320-lemon-glys-60.jpg&hash=a1b69a66dc00d99533b15ac6effc4efef4c9828a)
உதட்டின் கருமையைப் போக்குவதற்கு இருக்கும் சிறந்த வழிகளுள் ஒன்று, எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரினை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதனை நன்கு கலந்து, ஒரு வாரத்திற்கு தொடர்ந்து தினமும் தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமை நீங்கி, உதடு மென்மையாகும். மேலும் இந்த கலவையை முகத்திற்கும் பயன்படுத்தலாம்.
-
ஆப்பிள் சீடர் வினிகர்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366186418-applecidervinegar-600.jpg&hash=21a5a027786aafd601e64e1f70f41333211cb152)
உதட்டின் கருமையைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவியாக உள்ளது. அதிலும் தினமும் இரண்டு முறை, ஆப்பிள் சீடர் வினிகரை உதட்டின் மீது தேய்த்து, ஊற வைத்து கழுவினால், நல்ல தீர்வை தராவிட்டாலும், உதட்டில் உள்ள கருமையை மறைய வைக்கும்.
-
ரோஜாப்பூ
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F17-1366186468-roses-600.jpg&hash=97bfd675410bef8581fab3d841a3f068ec109c4a)
ரோஜாப்பூவின் இதழை அரைத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, குளிர வைத்து, பின் அதனை தினமும் உதட்டிற்கு தடவி வந்தால், இது உதட்டிற்கு லிப்-பாம் போன்று இருப்பதோடு, நல்ல தீர்வையும் தரும்.