FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Arul on August 16, 2013, 11:52:11 PM
-
இறைவா உன் உருவம் கல்லானதால்
உன் மனமும் கல்லாகி போனதோ
அழிக்க நினைக்கும் மனதுக்கு
ஆயிரம் அன்புகள் அள்ளிக் கொடுத்தாய்
அன்பு வேண்டி நின்ற எனக்கு மட்டும்
கிடைத்த ஒற்றை அன்பையும்
பறித்துக்கொண்டாய்
ஏனடா என்னை மட்டும் அன்புக்கு
ஏங்க வைத்தாய்
உன்னை நித்தம் தொழுவதற்கு
எனக்கு கொடுத்த பரிசா இது
உனை தொழுத கைகளும்
உனை சுற்றிய கால்களும் இனி
இருந்தால் என்ன முடமாகி
போனால் என்ன
காலனே நான் தயாராக இருக்கிறேன்
நீயாவது இந்த பொய்மையான ஆர்பறிக்கும்
உலகில் இருந்து அமைதியான உன்
உலகிற்கு அன்போடு எனை எடுத்து செல்
நீ கொடுக்கும் கடைசி அன்பாவது ஆனந்தத்தோடு அனுபவிக்கிறேனடா...........
-
kangal kalangum varigal arul .. ungal kavidhaiku nandri
-
மிக்க நன்றி KANMANI.............