FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 14, 2013, 10:35:30 AM

Title: ~ குதியங்கால் வலி ~
Post by: MysteRy on August 14, 2013, 10:35:30 AM
குதியங்கால் வலி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Futamil.info%2Fwp-content%2Fuploads%2F2013%2F08%2Fheel-266x200-e1375804441266.jpg&hash=3b711faf610f781d780c6fb394cd29b321b050ef)


நம் உடல் எடையை தாங்கும் முக்கிய மூன்று எலும்புகளில் ஒன்று பின் பாதத்தில் அமைந்துள்ளது. இதனை calcaneum என்று மருத்துவ பெயர் உண்டு. சிலர் அன்றாட வாழ்க்கையில் வேலை நிமிர்த்தமாக தொடர்ந்து நீண்ட நேரம் நிக்க வேண்டியோ அல்லது நடக்க வேண்டியோ பணிக்கப்படுகிறார்கள். இதில் தொடர்ந்து என்ற வார்த்தையின் வீரியமே இந்த குதிய கால் வலிக்கு காரணம். நாம் தொடர்ந்து நிக்கும் போது இந்த எலும்பில் ஏற்படும் பளு இதற்கு முக்கிய காரணமாக கூறலாம்.

சிலருக்கு பாதத்தை உற்று நோக்கினால் அவர்களின் உள் பாதத்தில் இருக்கும் வளைவு (ARCH) மிக குறைந்தோ அல்லது இல்லாமலோ இருக்கும் போது இந்த குதிய கால் எலும்பு அதிக எடையை தாங்க நேரும் போது மூட்டுக்களை சுற்றி இருக்கும் சவ்வு அதிக வேலையை செய்ய வேண்டி நேரிடுவதால் பாத வலி வரலாம்.

இதனை நேரம் கிடைக்கும் போது அமரும் போது உங்கள் எடையை அந்த எலும்புக்கு தொடர்ந்து சொல்லாமல் தவிர்த்து வலியை குறைக்கலாம் அல்லது அமர்ந்து கொண்டு உங்கள் பணியை தொடரும் போது வலி இல்ல பாதத்தை பெறலாம். சிலர் முடியாது என்ற பதிலை வைத்து இருந்தால் அவர்கள் அணியும் செருப்பை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியே அல்லது MCR (micro cellular rubber) ரால் செய்யப்பட்ட காலணிகளை அணிவதன் மூலம் இதனை தவிர்க்கலாம்.