FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on November 04, 2011, 03:06:30 PM

Title: இளமையை திரும்பத்தரும் பப்பாளி
Post by: RemO on November 04, 2011, 03:06:30 PM
பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, போலிக்அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு ,நார்ச்த்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.

பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்டால் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
பப்பாளியின் கனிகள், விதைகள், இலைகள் ஆகியவை மருத்துவகுணம் உடைய பகுதிகள் ஆகும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

காய்களில் இருந்து பப்பைன் என்னும் புரதங்களை சிதைக்கும் நொதி, கைமோப்பைன், மாலிக் அமிலம், பெக்டின் களிகள், புரதம், சர்க்கரை, அஸ்காரிபிக் அமிலம், தையமின், ரைபோஃளவின், கார்ளப்பசமைன், போன்ற ரசாயனப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

ரத்தசோகையை குணமாக்கும்

பப்பாளிப்பழம் செரிமான நோய்களை குணப்படுத்துவதோடு மலச்சிக்கல்களைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது. இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை அகற்றும், இரத்த சோகை என்னும் நோயை குணப்படுத்தும். நமது உடலில் காயம்பட்டு வெளியேறுகின்ற இரத்தமானது உடனடியாக உறைவதற்குத் தேவையான என்ஸைம்கள் இப்பழத்தில் அடங்கியுள்ளன. கல்லீரல், மண்ணீரல் நோய்க்கு பப்பாளிப் பழமே சிறந்த உணவாகும்.

வயிற்றுபோக்கு,வாய்வு,நெஞ்சு எரிச்சல்,அல்சர்,சர்க்கரை வியாதி,கண் பார்வை கோளாறுக்கும் பப்பாளி ஒரு சிறந்த மருந்து. பப்பாளிக்காயை சாறு அரைத்துக்குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.

இளமையோடு வாழ

தினசரி பப்பாளியை உண்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு இளமைப்பொலிவோடு வாழலாம். பப்பாளி தொடர்ந்து 4 வாரங்கள்சாப்பிட்டால் கொழுப்புசத்து 19.2விழுக்காடுகள் குறைகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பப்பாளிபழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்.வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும்.

நன்றாக பழுத்த பப்பாளிப் பழத்தை கூழ் போன்று பிசைந்து அதில் தேன் கலந்து முகத்தில் பூசினால் முகச் சுருக்கம நீங்கி முகம் பொலிவடையும். சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும்.இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு.

பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு

சாப்பாட்டிற்கு பின்பு பப்பாளியை சாப்பிட்டால் தேவையற்ற சதைகள் குறையும் மற்றும், குழந்தை பெற்ற பெண்கள் பப்பாளி சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்கள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். நரம்புத்தளர்ச்சிக்கு மிக நல்லது.

பொதுவாக குழந்தைகளுக்கும் இந்த பப்பாளிப்பழத்தைக் கொடுத்தால், உடல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் பல், எலும்பு வலுவடையவும் உதவும்.

காயங்களை குணமாக்கும் பால்

பழம் மட்டுமல்ல பப்பாளியில் சுரக்கும் பாலினை காயங்கள் உள்ள இடங்களில் பூசினால் காயம் விரைவில் குணமடையும். இதன் இலையை அரைத்துப் பூசினால் கட்டிகள் உடையும், வீக்கம் வத்தும். தேள் கொட்டிய இடத்தில் பப்பாளியின் விதையை அரைத்துப் பூசினால் விஷம் முறிவு ஏற்படும். இலைகளின் சாறு ஜுரம் நீக்கும். இருதய நோயை குணப்படுத்தும்.

சுமார் 30 கிராம் அளவிலான பப்பாளி பழத்தில் வைட்டமின் பி 1- 11 மில்லிகிராம்; பி2 - 72 மில்லி கிராம்; வைட்டமின் சி - 13 மில்லி கிராம்; இரும்புச் சத்து - 0.1 மில்லி கிராம்; சுண்ணாம்புச் சத்து - 0.3 மில்லி கிராம் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி

பப்பாளி சாப்பிட்டால் பல் சம்மந்தமான குறைநீங்கும். சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்க பப்பாளி சிறந்த மருந்து . நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடலாம். அடிக்கடி பப்பாளி பழத்தினை சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் இதனை சாப்பிடுபவர்களுக்கு எந்தவித நோயும் தாக்க வாய்ப்பில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
Title: Re: இளமையை திரும்பத்தரும் பப்பாளி
Post by: Global Angel on November 06, 2011, 12:51:57 AM
ya pappali nalla payanullathuthaan naanum kelvi patruken .... nalla pathivi ;)
Title: Re: இளமையை திரும்பத்தரும் பப்பாளி
Post by: RemO on November 06, 2011, 01:13:50 AM
Thanks apple ;) nanum kan adipen:D
Title: Re: இளமையை திரும்பத்தரும் பப்பாளி
Post by: ஸ்ருதி on November 09, 2011, 08:39:14 PM
i like papaya Juiceeeeeeeeeee....yummmyyyyy  :-* :-* :-*