FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Arul on August 12, 2013, 12:07:10 PM
-
உன்னோடு பேசிய நிகழ்வுகள்
என் பயணங்களில் என்னோடு
நினைவுகளாக பயணித்துக்
கொண்டே வருகின்றன
உன்னை பிரியும் நிமிடங்களில்
நான் உதிர்த்த வார்த்தைகளுக்கு
நீ ஏனோ மெளனமாய் எதுவும்
பதிலே இல்லாமல் சென்றுவிட்டாய்
ஏனோ என்னுள்ளே என் இதயத்திலே
மரண வலி வந்து வந்து போனதம்மா
உனக்கு புரிய வாய்ப்பில்லை,
என் மனது
மரண ஓலமிட்டு கதறியதை,
நானறிவேன் உன் மனதை
ஏதாவது ஒரு மூலையிலே
என் நினைவும் உன் மனதில்
ஓயாமல் இருக்குமென்று
உண்ணும் போதும்
நினைத்திருப்பேன்
உறங்கும் போதும்
நினைத்திருப்பேன்
என்றென்றும் என்னுடனே நினைவுகளாய் வந்திருப்பாய்..............