FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 11, 2013, 09:50:34 PM

Title: ~ முருங்கை பிஞ்சு,முருங்கை வேர்,முருங்கைப் பட்டை,முருங்கை கீரை, முருங்கை இலைக் காம்பு மருத்துவ குணங்
Post by: MysteRy on August 11, 2013, 09:50:34 PM
முருங்கை பிஞ்சு,முருங்கை வேர்,முருங்கைப் பட்டை,முருங்கை கீரை, முருங்கை இலைக் காம்பு மருத்துவ குணங்கள்:-

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/993370_595520190470300_3678930_n.jpg)


முருங்கை பிஞ்சு மருத்துவ குணம்:-
முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சம்மந்தமான அனைத்து நோய்களும் சரியாகும் . இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
முருங்கை பிஞ்சில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது , இது எலும்புகளுக்கு வலுவை அளிக்கின்றது . எலும்பு மஞ்ஜை
யை வலு படுத்தி இரத்தத்தை அதிக மாக உற்பத்தி செய்ய உதவுகிறது . ஆண்மை சக்தியை தூண்டுகிறது .

முருங்கை வேர் மருத்துவ குணம்:-
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் இரைப்பு, விக்கல், முதுகுவலி போன்ற நோய்கள் நீங்கும்.

முருங்கை பட்டை மருத்துவ குணம்:-
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து கட்டினால் வீக்கம் குறையும். முருங்கைப் பிசின் விந்துவை அதிகரிக்கும் . சிறுநீரை தெளிய வைக்கும்

முருங்கை கீரையின் மருத்துவ குணம்:-
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் நீங்கும்.
முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும் . முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் கல்சியம் உள்ளது எனவே இதை சாப்பிட்டால் இரத்த சோகை நோய் நீங்கும். உடல் மெலிவாக இருப்பவர்கள் வாரம் இரண்டு முறை முருங்கை கீரையை உண்டு வந்தால் உடல்-தேறும்.
முருங்கை இலையில் வைட்டமின் A, B, C, கால்ஷியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
ஒரு கோப்பை முருங்கை சாறில் 9முட்டை அல்லது அரைக்கிலோ வெண்ணை அல்லது 8கோப்பை பாலில் அடங்கி இருக்கும் வைட்டமின் A உள்ளது.
வயிற்று புண்ணை ஆற்றும். அஜீரண கோளாறுகளை போக்கி மலச்சிக்கலை நீக்கும்

இரத்தத்தில் கலந்து இருக்கும் தேவையில்லாத நீர்களை பிரித்து வெளியேற்றும் நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு போன்ற வற்றை போக்கும்.
சிறுநீரை பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் பக்க விளைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்வதிலிருந்து தப்பிக்கலாம்.
உடல் சூட்டை குறைக்கும் , கண் பார்வை நரம்புகள் வலுப்பெறும். பித்தத்தை குறைக்கும்.
இளநரையை நீக்கும் உடல் சருமத்தை பளபளக்க செய்யும்.
தாய்ப்பாலை அதிகமாக ஊறவைக்கும். வாரம் இரண்டு முறை பெண்கள் கண்டிப்பாக முருங்கை கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்:-
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன வெங்காயம், மிளகு போன்றவற்றை சேர்த்து சூப் வைத்து அருந்தினால், நரம்புகள் வலிமை பெறும். தலையில் கோர்த்துள்ள-நீர்கள் வெளியாகும். வறட்டு இருமல் போகும் .

நம்மில் பலர் முருங்கை கீரை சமைக்கும் பொழுது அதன் காம்புகளை கில்லி எறிந்துவிடுவது வழக்கம் . ஆனால் முருங்கைக் கீரையின் காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது.