FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 10, 2013, 11:58:14 AM

Title: ~ மல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:- ~
Post by: MysteRy on August 10, 2013, 11:58:14 AM
மல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-


(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn2/1150313_594333650588954_567704014_n.jpg)


சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.

சிறுநீரகக் கற்களையே கரைய வைக்கும் குணம் இந்த மென்மையான மல்லிகைப் பூக்களுக்கு உண்டு.

மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும்.

பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு ‌நீ‌ங்கு‌ம்.