FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Arul on August 10, 2013, 09:01:31 AM

Title: அம்மா
Post by: Arul on August 10, 2013, 09:01:31 AM
நான் பிறந்தவுடன் என் குரலைக்
கேட்டவுடன் நீயும் புதிதாய்
பிறந்தாய்
தட்டு தடுமாறி எழுந்த எனக்கு
கை கொடுத்து என் கைபிடித்து
நடக்க பழக்கினாய்
குழறலாக பேசிய என் வார்த்தைகளுக்கு
கோர்வை கொடுத்து எனக்கு வாயசைத்து
கற்றுக்கொடுத்தாய்
இயற்க்கை உபாதைகளால் என் ஆடைகளை
ஈரமாக்கிய போதெல்லாம்
உடைகள் மாற்றி என்னை
அழகுபார்த்தாய்

இவ்வளவும் எனக்கு செய்தாய்
உன் வாழ்வை எனக்காகவே
வாழ்ந்து

இன்று

நீ நடக்க இயலாமல் நடக்கிறாய்
உன் பேச்சுக்களிலும் தெளிவில்லை
இயற்க்கை உபாதைகளால் உன்
ஆடைகளை ஈரமாக்குகிறாய்

இன்று நீ குழந்தையாய்

உனக்கு செய்வது இன்று கடமையாய் யாரோ

உன்னால் நான் இன்று உயரத்தில்
ஆனால் நீ இன்று முதியோர் இல்லத்தில்

உன்னை கொல்லாமல் கொல்லுகிறேன்
உன் உணர்வுகளையும் சேர்த்து...............