FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on August 06, 2013, 01:58:28 PM

Title: ~ வாஷிங்மெஷினை கையாள்வது எப்படி? ~
Post by: MysteRy on August 06, 2013, 01:58:28 PM
வாஷிங்மெஷினை கையாள்வது எப்படி?

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-frc1/1095045_591072020943131_931997223_n.jpg)


வாஷிங்மெஷினை முதலில் ஒரு நிமிடம் ஓட்டிப் பார்த்து சரியான நிலையில் உள்ளதா? என பார்த்த பின் சலவை செய்ய வேண்டும். வாஷிங்மெஷினில் சலவை செய்யும் முன் டாங்கு தண்ணீரால் நிரப்பப் பட்டிருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்ட பிறகு தான் ஹீட்டரை இயக்க வேண்டும்.

வாஷிங்மெஷினில் அதிகமாக நுரை தள்ளும் சோப்புகளை பயன்படுத்தக்கூடாது. நுரை டிரம்புகளில் புகுந்து தொல்லை தரும். வாஷிங்மெஷினில் கிழிந்த துணிகளை போட்டு துவைக்க வேண்டாம் ஏனெனில் மேலும் துணிகள் கிழிந்து விடும். வாஷிங்மெஷினில் துணிகளை உள்ளே போடுவதற்கு முன்பும், மின்சார சப்ளை மெயினை ஆப் செய்துவிடவும்.

வாஷிங்மெஷினில் துணிகளை சலவை செய்யும் போது நீலத்தை அதனுடன் கலக்கக்கூடாது. ஏனெனில் இயந்திரத்திலுள்ள மின்சார அமைப்புகள் பாதிப்புக்குள்ளாகிவிடும். இயந்திரத்தில் எத்தனை சுற்றுகள் சுற்றலாம் என உள்ளேதோ அத்தனை சுற்றுகள் தான் சுற்றவேண்டும்.

வாஷிங்மெஷினை உபயோகித்து முடித்ததும் நன்கு துடைத்து உலரச் செய்ய வேண்டும். மேல் பகுதியில் உள்ள ரப்பர் ரிம்மை துடைக்க வேண்டும்..ஹோசில் ஆங்காங்கே கிளாம்ப் போடவேண்டும்.