FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 06, 2013, 01:50:58 PM

Title: ~ இதயம்-கல்லீரல்- பலப்படுத்த---இய‌ற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on August 06, 2013, 01:50:58 PM
இதயம்-கல்லீரல்- பலப்படுத்த---இய‌ற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-frc3/972319_593275470694772_652842294_n.jpg) (http://www.friendstamilchat.com)


பித்தத்தை தவிர்க்க
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வர பித்தத்தை குறைக்கும்.

குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்க
தினசரி 2 பேரீச்சம்பழம் சாப்பிட்டு, பால் சாப்பிட குளுகோஸ் நேரடியாக உடலுக்குள் சேருகிறது.

கல்லீரல் பலப்படுத்த
தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர கல்லீரல் பலப்படுகிறது. வைட்டமின் சி சத்து மற்றும் கால்சியம் இரும்பு சத்து உள்ளது.

உடல் குறைவு ஏற்பட்டு படுக்கையில் உள்ளவர்களுக்கு
உடல் நலம் குன்றியவர்கள் தோல் நிறம் மாறியிருக்கும். மீண்டும் நிறம் பெற அத்திபழம் சாப்பிட வேண்டும். இழந்த இயற்கை நிறத்தை பெற அத்திபழம் உதவும்.

இதயத்தில் பலம் கிடைக்க
மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல் இதயம் வலுவடைகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

இரத்த அழுத்தம் சரியாக
டீ காப்பிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழசாறு பிழிந்து சாப்பிட்டு வர நல்லது.

குழந்தைகளுக்கு மந்தம்
கருவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து, குழந்தைகளுக்கு குளிப்பாட்டியவுடன் கொடுக்கவும். மந்தம் குறையும். பசி எடுக்கும்.

குழந்தைகளுக்கு வாய்ப்புண்
குழந்தைகளுக்கு வாய்ப்புண் இருந்தால், இதற்கு சிறிது பாலில் மாசிக்காய் அரைத்து அத்துடன் சிறிது தேனையும் கலந்து நாக்கில் தடவ குணமாகும்.