FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 05, 2013, 08:56:39 PM

Title: ~ ஆந்திரா ஸ்டைல்– மட்டன் கிரேவி ~
Post by: MysteRy on August 05, 2013, 08:56:39 PM
ஆந்திரா ஸ்டைல்– மட்டன் கிரேவி 

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmanakkumsamayal.com%2Fwp-content%2Fuploads%2F2012%2F08%2F2011-10-01_21-17-20_776-1024x577-575x262.jpg&hash=eec4f13ee690760670ac5657548f9986407d6871)

Ingredients
மட்டன் - 1 / 2 கிலோ
மஞ்சள் தூள் - 1 / 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (பெரியது ) பொடியாக நறுக்கி கொள்ளவும்
தக்காளி - 1 (பெரியது ) பொடியாக நறுக்கி கொள்ளவும்
தனி மிளகாய் தூள் - 1 / 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - நறுக்கியது 2 டீஸ்பூன்
கருவேப்பலை - 10 இலை


Method

Step 1

வறுத்து - அரைத்து கொள்ள வேண்டியவைகள் (தூள்) : ஏலக்காய் - 2 பட்டை - 1 கிராம்பு - 2 பெருஞ்சீரகம் - 1 / 2 டீஸ்பூன் கடுகு - 1 / 2 டீஸ்பூன் கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன் மிளகு - 5 சிறுஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
Step 2

குக்கரில் தண்ணீருடன் மட்டன், உப்பு (தேவையான அளவு) மற்றும் மஞ்சள் தூள் கலந்து 6 விசில் வரும் வரை மட்டன்ஐ வேக வைக்கவும். வேகவைத்த தண்ணீரை பத்திர படுத்தி வைத்துகொள்ளவும்.
Step 3

கடாயில் எண்ணெயை விட்டு, கருவேப்பிலை மற்றும் வெங்காயத்தை பொன் நிறம் வரும் வரை வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் (1 டீஸ்பூன் மட்டும்) சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தக்காளி மற்றும் மட்டன் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை அதிக வெப்பத்தில் வதக்கவும். உப்பு மற்றும் அரைத்து வைத்தவைகளை சேர்த்து மிதுவான வெப்பத்தில் 5 நிமிடம் வதக்கவும். மட்டன் வேகவைத்த தண்ணீரை (கிரேவிக்கு தேவையான அளவு) சேர்த்து மிதுவான வெப்பத்தில் நன்கு கொதிக்க விடவும்.நன்கு கிரேவி ஆனா பிறகு மீதம் உள்ள மிளகு தூள் (1 டீஸ்பூன்) சேர்த்து நன்கு கலக்கவும். இறக்கிய பின்னர் மேலே சிறிது கொத்தமல்லி தழையை தூவினால்... சுவையான ... மணமான.. ஆந்திரா ஸ்டைல் மட்டன் கிரேவி ரெடி... இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.