FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 05, 2013, 01:42:42 PM

Title: ~ பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்:- ~
Post by: MysteRy on August 05, 2013, 01:42:42 PM
பெண்களுக்கான அவசியக் குறிப்புகள்:-

(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/67659_592850894070563_597044245_n.jpg)


காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் அரைத்து பூசி வர விரைவில் புண் ஆறி விடும்

தயிரை தலைக்குத் தேய்த்து ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்..

பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிட்டால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பால் அதிகமாக சுரக்கும்..

இரவில் செம்பருத்திப் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டு படுத்து காலையில் எடுப்பதால் மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.பேன் பொடுகு அகலும்..

தந்தத்தால் ஆன அழகான அலங்காரப் பொருள்கள் நாளடைவில் மஞ்சள் நிறமடைந்து மங்கி விடும் இதற்கு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அப்பொருள் களின் மீது வைத்துஅழுத்தி தேய்த்தால் மஞ்சள் நிறம் போய் விடும் அசல் நிறம் கிடைக்கும்..

மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்துப் பூசி வந்தால் கரப்பான் புண்கள் விரைவில் ஆறி விடும்.

கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து அந்நீரால் வாய் கொப்பளித்தால் பல்வலி நீங்கி விடும்.

ரவையை வறுத்து வைத்துக் கொண்டால் நீண்ட நாள்களுக்கு பூச்சி புழுக்கள் வராமலிருக்கும்.