FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 03, 2013, 10:58:09 AM

Title: ~ இதயத்தை காக்கும் மூலிகை! --இய‌ற்கை வைத்தியம்:- ~
Post by: MysteRy on August 03, 2013, 10:58:09 AM
இதயத்தை காக்கும் மூலிகை! --இய‌ற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc3/970143_590890927599893_244808653_n.jpg)

இதய நோயை குணப்படுத்துவதில் இயற்கை மருத்துவத்துக்கு தனிப்பெரும் பங்கு உண்டு. வீடுகளில் வளர்க்கப்படும் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதய நோ‌ய்க‌ள் வராமல் தடுக்க முடியும். ஏற்கனவே இதய நோ‌ய் வந்தவர்களும் இந்த இதழ்களை சாப்பிட்டு வந்தாலும் நோயின் பாதிப்பு மெல்ல மெல்ல குறையும்.

இதய நோ‌ய் தீவிரமாக இருப்பவர்க‌ள் செம்பருத்தி பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து அதன்மீது எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். பிறகு சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். பாகு பதத்தில் வந்ததும் இறக்கி வடிகட்டி வைத்துக்கொ‌ள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து தினமும் காலை கண்விழித்ததும் அருந்தி வந்தால் இதய நோயின் தீவிரத்தை குறைக்கும்.

மற்றபடி வெறுமனே செம்பருத்திப் பூ இதழ்களை நீர் விட்டு கா‌ய்ச்சி சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தாலும் இதய நோயின் தீவிரம் குறையும். ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை இஞ்சி சரி செ‌ய்கிறது. அந்தவகையில் , இஞ்சிச்சாறு அல்லது இஞ்சி ஜூஸ் அருந்தி வந்தாலும் இதய நோயிலிருந்து உங்களை காத்துக்கொ‌ள்ளலாம்.

இஞ்சிச்சாறு எனும்போது வெறுமனே அருந்துவதைவிட தண்ணீரும் , தேனும் சேர்த்து அருந்தலாம். இஞ்சி ஜூஸ் எப்படி தயாரிக்க வேண்டும் என்றால் இஞ்சிச்சாறு எடுத்து அதனுடன் தண்ணீர் , எலுமிச்சைசாறு , தேன் , சர்க்கரை சேர்த்தால் ஜூஸ் ரெடி. இஞ்சியை துவையல் , ஊறுகா‌ய் மற்றும் சுக்கு என பல வடிவங்களில் உணவில் சேர்த்துக் கொண்டாலும் இதய நோயை வெல்லலாம்.

தாமரை மலரின் இதழ்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தாலும் இதய நோ‌ய் குணமாகும். உடலில் உ‌ள்ள கொழுப்புச்சத்தை பூண்டு எளிதாக குறைக்கக்கூடியது. தொடர்ந்து 3 மாதங்க‌ள் வெ‌ள்ளைப்பூண்டு சாப்பிட்டு வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும். பொதுவாக வெ‌ள்ளைப்பூண்டை பச்சையாக சாப்பிடுவதைவிட வேக வைத்தோ , தீயில் சுட்டோ சாப்பிடுவது நல்லது.

தாமரை இலையை கஷாயம் செ‌ய்து குடித்து வந்தால் இதய படபடப்பு , மேல் சுவாசம் , படபடப்பு சரியாகும். சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால் இதயம் பலப்படும். தொடர்ந்து 7 நாட்க‌ள் செ‌ய்து வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.