FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: MysteRy on July 30, 2013, 08:52:21 PM

Title: ~ தேவையற்ற மென்பொருட்களை கணனியிலிருந்து முழுமையாக நீக்குவதற்கு ~
Post by: MysteRy on July 30, 2013, 08:52:21 PM
தேவையற்ற மென்பொருட்களை கணனியிலிருந்து முழுமையாக நீக்குவதற்கு

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Futamil.info%2Fwp-content%2Fuploads%2F2013%2F07%2Fdeleting_programs_001-e1375037382736.jpg&hash=ab8f3e8372401ca5e7440dc5d41f490d1d354006)


தற்காலத்தில் அதிகரித்துவரும் கணனிப் பயன்பாட்டிற்கு ஏற்ப மென்பொருட்களின் வருகையும் அதிகளவாகவே காணப்படுகின்றது.
இவ்வாறான மென்பொருட்களில் சிலவற்றினை கணனியில் நிறுவிக்கொள்ளும்போது கணனியில் உளவுபார்க்கும் வேலையைச் செய்வதாக காணப்படுகின்றன.

அதேபோன்று சில தேவையற்ற மென்பொருட்களை நிறுவுவதனால் கணனியின் வேகம் மந்தடையும் சாத்தியமும் அதிகமாகவே காணப்படுகின்றது.

இதனால் அவ்வாறான மென்பொருட்களை தேடி முற்றுமுழுதாக கணனியிலிருந்து நீக்கிவிடுவது அவசியமாகும்.

எனினும் சாதாரண முறையில் மென்பொருட்களை நீக்கும்போது சில கோப்புக்கள் கணனியிலிருந்து நீங்காது.

இதனால் கணினியின் வேகம் குறைவடைவதுடன், தேவையற்ற எச்சரிக்கை செய்திகளை தோற்றுவித்த வண்ணம் இருக்கும்.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வாக Soft Organizer எனும் மென்பொருள் காணப்படுகின்றது.இம்மென்பொருளானது ஏனைய மென்பொருட்களினை விடவும் இலகுவான பயனர் இடைமுகத்தினை கொண்டுள்ளதுடன்,விரைவான செயற்பாட்டினையும் கொண்டதாகக் காணப்படுகின்றது.

மேலும் கணனியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களையும் ஒரே பார்வையில் பார்க்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.