FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on July 29, 2013, 10:51:38 PM

Title: இறால் சில்லி வறுவல்
Post by: kanmani on July 29, 2013, 10:51:38 PM
தேவையான பொருட்கள்:

இறால் - 200 கிராம்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
பூண்டு - 4 பற்கள் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, நன்கு ஒரு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

 பின்பு கழுவி வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் இறாலை வேக வைக்க வேண்டும்.

அடுத்து மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, துருவி வைத்துள்ள தேங்காய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் அனைத்து பொருட்களும் நன்கு வேகுமாறு 5-6 நிமிடம் வதக்கி இறக்கினால், சூப்பரான இறால் சில்லி வறுவல் ரெடி!!!