-
பிலேட்ஸ் உடற்பயிற்சியால் கர்ப்பிணிகள் பெறும் பயன்கள்
கர்ப்பிணிப் பெண்கள் தமது கர்ப்பகாலத்தில், எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அநேகம். மயக்கம், சோர்வு, கால் வீக்கம், இடுப்பு வலி, எளிதில் உடல் களைப்படைதல் போன்ற பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு. எப்போதும் சுறுசுறுப்பாகத் திகழ கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு சிறந்த பாதுகாப்பான மாற்றுமுறை உடற்பயிற்சியாக அமைந்திருப்பது தான் பிலேட்ஸ் (Pilates) என்னும் உடற்பயிற்சி முறை.
பிலேட்ஸ் என்னும் உடற்பயிற்சி முறையானது கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பாக எளிதில் மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அடிவயிற்றுக்கு வலிமையைத் தரும் வகையிலும், மூச்சுவிடும் முறையை சீராக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உடற்பயிற்சியானது ஒரு நாளைக்கு எத்தனை முறை செய்ய வேண்டும் என்பது அவரவர் வசதி மற்றும் இயலும் தன்மையைப் பொறுத்து மாறுபடும். இப்போது பிலேட்ஸ் என்னும் உடற்பயிற்சி முறையால் கர்ப்பிணிப் பெண்கள் அடையும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!
உடல் எடையைக் கட்டுக்குள் பராமரித்தல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F02-1367477658-pregnan-600.jpg&hash=64fc25d11302f978a2423409f87f43392715d210)
கர்ப்ப காலத்தில், கட்டுப்பாடான உணவு முறையைப் பின்பற்ற முடியாது. அதனால் உடல் எடையை கட்டுக்குள் பேண முடியாது என்று பொருளல்ல. பிலேட்ஸ் என்னும் உடற்பயிற்சி முறையால் கர்ப்பிணிப் பெண்கள் உடல் எடையைக் கட்டுக்குள் பராமரிக்க முடியும்.
-
உடல் களைப்படைதலை தடுத்தல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F02-1367477690-women-11-5600.jpg&hash=629a06f0fd4967cb199b8f7ba92383af11c8b65c)
மூவ்மெண்ட் பிலேட்ஸ் (Movement Pilates) என்னும் உடற்பயிற்சி முறையால் உடல் சக்தியைப் பாதுகாப்பாக பேண முடியும். கர்ப்ப காலத்தில், உடல் களைப்படைதலைத் தவிர்க்க உடல் சக்தி மிக அவசியம்.
-
கால் சதைப் பிடிப்பு, கால் வீக்கத்தை குறைத்தல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F02-1367477714-exercisa-600.jpg&hash=426475f4eadc5b5a5483520e8cc31bc41d9b2c10)
பிலேட்ஸ் என்னும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது செய்யும் கால் அசைவுகள், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். பெரிய தசைகளுக்கும். கணுக்கால் தசைகளுக்கும் பிலேட்ஸ் பயிற்சி அளிக்கிறது. மேலும் இந்த உடற்பயிற்சி உடலில இரத்த ஓட்டம் சீராகப் பாய்ந்து கால் சதைப் பிடிப்பு, கால் வீக்கம் ஆகியவற்றை சரிசெய்து இயல்பாக்குகிறது.
-
உடல் தோற்ற நிலையைப் பேணுதல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F02-1367477740-womens-6003.jpg&hash=5d0e030df90344f8f97105c78eb7057e94eff64b)
கர்ப்ப காலத்தில் உடல் தோற்ற நிலை பலவாறு மாறுபாடு அடைகிறது. பெரிதாகும் வயிறு, மொத்த உடல் எடையையும், ஒரே இடத்தில் குவித்து தாங்கச் செய்கிறது. இதனால், உடல் தசைகள் மற்றும் எலும்பு மூட்டுக்களில், குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. பிலேட்ஸ் என்னும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, உடல் தோற்ற நிலையை சரிசெய்து, உடல் வலிகள் எதுவும் வராமல் தடுக்கிறது.
-
உடல் வடிவமைப்பைப் பாதுகாத்தல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F02-1367477763-women-preg-600.jpg&hash=6e56283af9940d6f24f58bced026ebf02d7201a9)
கர்ப்ப காலத்தில் உடல் குண்டாவதை சில பெண்கள் விரும்புவதில்லை. இக்கவலை பிலேட்ஸ் பயிற்சியினால் நிவர்த்தியாகிவிடும். கர்ப்ப காலம் முடிந்ததும், தசைகள் தளர்ந்து விடும். எனவே கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும், தசைகளுக்கான பயிற்சிகளைச் செய்து வர வேண்டும். இப்படிச் செய்து வந்தால், கர்ப்பமாவதற்கு முன் இருந்த உடல் வடிவமைப்பை மீண்டும் பெறலாம்.
-
வலியிலிருந்து நிவாரணம் அளித்தல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F02-1367477788-women-preg-12-600.jpg&hash=11229f5e4582dc0564b3e8ad0785d20007192e09)
வயிற்றுக்குள் குழந்தை வளர வளர, வயிறு பெரிதாகிக் கொண்டே இருக்கும். இதனால் இடுப்பின் அதிகமான பகுதி குழந்தையின் எடையைத் தாங்க வேண்டியுள்ளது. இதனால், பின்புற இடுப்பானது வலியை உணர ஆரம்பிக்கும். அடிவயிற்றுக்கு வலிமை சேர்க்கும். ஆனால் இந்த பிலேட்ஸ் பயிற்சியை செய்வதினால், பின்புற இடுப்பிற்கு சுமையைக் குறைத்து வலி நிவாரணம் அளிக்கிறது.
-
இயல்பான சுபாவத்தைப் பேணுதல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F02-1367477832-pregnancy-womes-600.jpg&hash=340daa7e527fde710398fc48665ddc3100dba74e)
கர்ப்ப காலத்தில் மூச்சு விடுதல், நடத்தல் ஆகியவை கடினமாகின்றன. தினப்படியான செயல்கள் செய்வது கடினமாகி, இடையூறு ஏற்பட்டு, மனதின் இயல்பான சுபாவத்திற்கு கேடு விளைவிக்கிறது. பிலேட்ஸ் பயிற்சிகள் நரம்புகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றன. பிலேட்ஸ் பயிற்சிகளால், உடலுக்குத் தேவையான சக்தி சீராக உடலுக்கு வழங்கப்பட்டு, சுக பிரசவத்திற்கு தயாராக வைத்திருக்கிறது.
-
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துதல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F02-1367477862-sleep-women-600.jpg&hash=5d0dd7769b58d2a89986fa27e7085b1c11ec0653)
கர்ப்ப காலத்தின் மூன்றாவது பகுதியில் (third trimester) கர்ப்பிணிப் பெண்கள் வசதியான தூங்கும் முறையைத் தேர்ந்தெடுக்க மிகவும் சிரமப்படுவார்கள். எப்படிப் படுத்தாலும் அது வசதியாக இருக்காது. பிலேட்ஸ் பயிற்சிகள் மூச்சு விடும் முறைகள் மற்றும் இரத்த ஓட்டத்தினை சீராக்கி, வசதியாகவும் ரிலாக்ஸாகவும் உணர வைத்து, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.
-
பிரசவத்திற்குப் பின் மன இறுக்கத்தைக் குறைத்தல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F02-1367477896-pregnancy-s-600.jpg&hash=5dbe1fd9589d85a2000b5e633b3d74ed8a657b40)
ஒன்பது மாத கர்ப்ப காலமும், குழந்தை பிறப்பும், தாய்மார்களின் உடல் சக்தியை எல்லாம் உறிஞ்சி உடலைத் துவளச் செய்துவிடுகிறது. உடல் கட்டமைப்பைப் பேணாது விட்டுவிட்டால், கர்ப்பம் முதல் குழந்தைப் பேறு வரை தாய்மார்கள் களைப்பு ஒன்றைத் தான் அனுபவிப்பார்கள். கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளும் மூவ்மெண்ட் பிலேட்ஸ் என்னும் பயிற்சி, உடலை சுறுசுறுப்பாகவும், விசையோடு இயங்கவும் உதவும். கர்ப்ப காலத்தில் உரிய பயிற்சிகளை மேற்கொண்டு, உடல் தகுதியாக இருக்கும் வகையில் பேணி வந்தால், பிள்ளைப் பேறு எளிதாக இருப்பதோடு, குழந்தை பிறந்த பின்னரும், குழந்தையை பராமரிக்க ஏதுவான உடல் மற்றும் மன நிலையைப் பெறலாம்.