FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 28, 2013, 01:46:42 PM

Title: ~ மாதுளம் பழத்தின் சில மருத்துவ குணங்கள் :- ~
Post by: MysteRy on July 28, 2013, 01:46:42 PM
மாதுளம் பழத்தின் சில மருத்துவ குணங்கள் :-

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/1000868_586487774706875_2106717794_n.jpg)


எந்த வயிற்றில் மாதுளைப்பழத்தின் ஒரு விதைப்பட்டு விடுகிறதோ அதன் காரணம் அவருடைய இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி நன்கு செயல்படும்

கண்ணோய் நீங்கிட

மாதுளை மொட்டை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் கண்வலி, கண்ணில் நீர் வடிதல், பூளை தள்ளுதல் போன்ற கண் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வராது

இரத்தம் சுத்தமாக

இரத்த நாளங்களில் கொழுப்பு, அல்லது ஒருவிதமான கரைபடித்து அடைத்துக் கொண்டால் இரத்த ஓட்டம் தடைபடும். அப்போது இதயபாதிப்பு ஏற்படும். இது அதிக உணவு உண்ணுவதால் ஏற்படுகிறது. இதற்கு அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தைத் நீங்கி விடும். மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி நல்ல இரத்தம் நிறைய ஊற உதவும்.

1. வாதம், கபம், அஜீரணம், வீக்கம், வலி இவைகள் நீங்க மாதுளைப்பழம் சிறந்த உணவாகும்.

2. தாதுபுஷ்டிக்கு இது நிகரற்ற நல்ல மருந்தாகும்.

3. மேனியை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.

4. நெஞ்சு வலிக்கு இது நல்லது. மேலும் தொண்டை கரகரப்பை நீக்கி குரல் இனிமைபெற உதவும்.