FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 27, 2013, 07:11:45 PM

Title: ~ ரத்த சோகையை தடுக்கும் இயற்கை வழிகள்:- ~
Post by: MysteRy on July 27, 2013, 07:11:45 PM
ரத்த சோகையை தடுக்கும் இயற்கை வழிகள்:-

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn2/1075637_587842904571362_1180689499_n.jpg)


நோயாளி இரும்புச்சத்து இல்லாத உணவுகளை உண்ணும் பழக்கம் உடையவராக இருந்தால் இரும்புச் சத்து அதிகம் இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும். கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், உலர் திராட்சைஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது.

வலி நிவாரணி, வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளாலும் ரத்த சோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூலகாரணத்தை சரி செய்ய வேண்டும். இத்தகைய ரத்த சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்புச்சத்துள்ள கீரைகளான முருங்கைக்கீரை, ஆரைக்கீரை, அரைக்கீரை, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரைபோன்ற கீரைகளையும், திராட்சை, பேரீச்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது.

இதனால் ரத்தம் விருத்தி அடைந்து ரத்தச்சோகை நீங்கும். மேலும் முளைக்கட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுந்தங்களி, பாதாம், பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது.

காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது. பெண் குழந்தைகள் பருவ வயது வரையும் அதற்கு பின்பும் மேற்கண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் ரத்தச்சோகை நீங்கும்