மருந்தில்லாமல் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தலாம்(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-rjjUaoFD3LA%2FT5Nv_p4fdBI%2FAAAAAAAADtA%2F8wlX2a5qqmg%2Fs320%2Fdiastolic_blood_pressure2.jpg&hash=4aff57704ad4ed3a072e6e6e3c5c2387db03997f)
தலைமுறையினரையும் விட்டு வைக்கவில்லை இரத்த கொதிப்பு. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இரத்த கொதிப்பு எனப்படும் "ஹைப்பர் டென்ஷன்" பலரின் வாழ்வில் குடிகொண்டுள்ளது.
இதற்கு காரணம் அலுவலகத்தில் பல மணி நேர வேலை, சரியான உடற்பயிற்சி இல்லாமை, பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு, நொருக்கு தீனிகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுதல், என தினமும் தொடர்ந்து நிகழ்வதால் இரத்த ஓட்டம் சீரான நிலையில் இல்லாமல் இரத்த கொதிப்பு அதிகரிக்கிறது. இதனால் அதிகமானோர் பாதிப்படைகின்றனர்.
இந்தியாவில் 40 சதவீத மக்கள் உயர் ரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ ஆய்வு கூறுகின்றது. மாத்திரை மருந்து இல்லாமல் இரத்தை அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.
இரத்த கொதிப்பை கட்டுப்படுத்த வழிமுறைகள்;
* வாரத்தில் ஒரு நாள் சுமார் 1 மணி நேரமாவது ஜாக்கிங் (சீரான ஓட்டம் எடுத்து கொள்ளலாம். இதனால் உடலுக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக செயல்படுவதோடு, இதயம் நன்றாக செயல்படும்.
நடைபயணம் மேற்கொள்வதால் அனேக உடல் உபாதைகளுக்கு தீர்வாக இருக்கும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நடைபயணத்தை விட, ஜாக்கிங் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி அளித்து, உடலை சீராக வைக்க உதவும்.
* இரத்த கொதிப்பு உள்ளவர்கள் தினமும் தயிர் எடுத்து கொள்ளலாம். இயற்கையாக தயிரில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது, இரத்த கொதிப்பை குறைக்கும் தன்மை தயிருக்கு உள்ளதென்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழத்தை தினமும் எடுத்துக் கொள்ளலாம். ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாழை பழத்திற்கு உண்டு.
* அயோடின் நிறைந்த உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும்.
* உடல் எடை கூடாமல், கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ள வேண்டும்.
* புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுதல் வேண்டும். இதில் உள்ள நிகோடின் என்ற நஞ்சு இதய துடிப்பை வேகமாக துடிக்க வைத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது.
* இவர்கள் அதிக உடல் உழைப்பு உள்ள வேலைகளை தவிர்க்க வேண்டும். பளு தூக்கும் பயிற்சியை செய்யவே கூடாது.
* மது அருந்தும் பழக்கத்தை கைவிடுதல் நல்லது.
இரத்த கொதிப்பு உள்ளவர்கள், இவ்வாறு தினமும் பின்பற்றி வந்தால் நூறு வயது வரை இளமையுடன் நோயில்லாமல் வாழலாம்.