FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 21, 2013, 01:50:14 PM

Title: ~ மருத்துவ குணம் கொண்ட வாழைப்பூ ~
Post by: MysteRy on July 21, 2013, 01:50:14 PM
ஊதா மொட்டுகளுடன் குழாய் போன்ற அமைப்பில் தோன்றும் வாழைப்பூவின் பூக்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Futamil.info%2Fwp-content%2Fuploads%2F2013%2F07%2Fimages1-e1373903404658.jpg&hash=01b3304d96fbcd3dc7639337487a0f56bcc6e5eb)

வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் பூக்களை உறிஞ்சினால் தேன்  போன்ற திரவம்


இருக்கும். வாழைப்பூவில் வைட்டமின் ஈ மற்றும் ஃபிளாவனாய்டுகளை அதிகம் கொண்டுள்ளது. வாழைப்பூவில் புரதங்கள் மற்றும்  நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் காணப் படுகிறது. பலரும் வாழைப்பூவை உணவுக்காக பயன் படுத்துகின்றனர். இது நிறைய மருத்துவ பலன்களை  கொண்டுள்ளது எனினும் விஞ்ஞானரீதியாக எந்த ஒரு தகவலும் இல்லை. ஆனாலும் இயற்கை மருத்துவத்தில் வாழைப்பூ பக்க விளைவுகளுக்கு  மருந்தாகப் பயன் படுத்தப்படுகிறது.

நோய்த் தொற்று எத்தனால் நோய்த் தொற்று காரணமாக உருவாகும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை வாழைப்பூக்களின் சாறுகள் மூலம் தடுக்கலாம்.  வாழைப்பூவில்  பேசில்லஸ் சப்ஸ்டில்ஸ், பேசில்லஸ் க்ரியூஸ் ஈஸ்செர்ச்சியா கோலி போன்றவைகளை கொண்டுள்ளதால் காயங்களை ஆற்றுவதற்கும் நோய்த்  தொற்று, அலர்ஜி என அனைத்திற்கும் இது பயன்படுகிறது.

மாதவிடாய் இரத்தப்போக்கு

வீட்டு வைத்தியத்தில் சிறந்தது வாழைப்பூ. மாத விடாய் கோளாறால் அவதிபடுபவர்களுக்கு வாழைப்பூ உதவுகிறது. ஒரு கப் சமைத்த வாழைப்பூவுடன்  ஒரு கப் தயிர் சேர்த்து சாப் பிட்டு வந்தால் மாதவிடாயின் போது அதிக ரத்த போக்கு ஏற்படாமல் பாதுகாக்கிறது. சமைத்த வாழைப்பூவுடன் தயிர்  சேர்த்து சாப்பிடுவதால் உடலில் புரோஜெஸ்ட்டி ரோன் அளவு அதிகரிக்கிறது. அதன் மூலம் மிகையான மாதவிடாய் தொடர்புடைய இரத்தப்போக்கு  குறைகிறது. பொதுவாக மாதவிடய் சம்பந்தமான அனைத்து பிரச்சினை களையும் தீர்க்கிறது.

மேலும் வாழைப்பூவை தினமும் நாள் ஒன்றுக்கு 0.15 முதல் 0.25 கிராம் என வேகவைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து  ஹீமோகுளோ பின் அளவை அதிகரிக்கும். ஆண்டிமைக்ரோபயசின் செயல்பாடு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் என  மருத்துவரீதியாக நிரூபிக்கபடவில்லை.