ஆபத்தான நக பாலீஷ்(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fen.hairdresser-models.eu%2Fphoto%2Ffingernails%2Fred-nails-with-nail-polish-dripping.jpg&hash=e9a962231a81baeecad9a8a8da3dcc203b92eb65)
வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு நகம் வளர்வதே இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை. வேலை செய்யும் போது நகம் தேய்ந்து அதன் வளர்ச்சி நம் கண்களுக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது.
மருதாணி இலைகளை அரைத்து வைக்கப்படும் மருதாணி விரல் நகங்களுக்கு நல்ல பயனை அளிக்கிறது. அதனை முடிந்தால் செய்து வரலாம். சிலர் அடிக்கடி நகப்பூச்சை பயன்படுத்துவார்கள். இது மிகவும் தவறு. மாதத்தில் ஓரிரு நாட்களாவது நகங்கள் காற்றோட்டத்தில் இருக்க வேண்டும்.
அப்போதுதான் அதன் உண்மையான தன்மையை நாம் அறிய முடியும். மேலும் நகங்கள் காய்ந்து வறண்ட தன்மையுடன் இருந்தால் அதற்காக நல்ல மாய்ச்சுரைசர் க்ரீம்களைப் பயன்படுத்துவது சிறந்தது.