முகச்சுருக்கம் நீங்க...(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.slendertone.com.au%2Fskin%2Fvivid_dreams_lotus%2Fimages%2Fpages%2Fyour_face.jpg&hash=87cded4e5d64cc3d07de1bb911deabfc9a92dc25)
சிறிது தேன், வாழைப்பழம், முட்டைக்கரு ஆகியவற்றை நன்கு கலக்கி முகத்திலும் கைகளிலும் தடவிப் பதினைந்து நிமிடம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் அலசி விடவும். இம்மாதிரி தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் நீங்கிப் புதுப் பொலிவு பெறுவீர்கள்.
பப்பாளி அல்லது வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசிக் கொள்வது நல்லது.
தக்காளிச் சாற்றை முகத்தில் தடவ வேண்டும்.இது தோலில் உள்ள செல்களை புதுப்பிக்கிறது மேலும் முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுகிறது.
எப்போதும் இனிமையான சிந்தனைகள் இருந்தால் முகம் அழகாக இருக்கும். முகச் சுருக்கம் மறைந்து விடும்.
பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும் அல்லது பழச்சாறு குடிக்க வேண்டும்.
மேலும் தண்ணீரையும் நிறைய குடிக்க வேண்டும்.