FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on July 19, 2013, 11:18:12 AM

Title: செட்டிநாட்டு ஸ்பெஷல் ரவா தோசை
Post by: kanmani on July 19, 2013, 11:18:12 AM
பாம்பே ரவை            & 200 கிராம்
மைதா மாவு            & 200 கிராம்
பச்சரிசி மாவு            & 200 கிரம்
அல்லது இட்லி மாவு மீந்தது & 200 கிராம் (1 கப்)
உப்பு                 & தேவையானது
கடுகு                & ஒரு ஸ்பூன்
மிளகு                &  ஸ்பூன்
சீரகம்                &  ஸ்பூன்
முந்திரிபருப்பு            & 10 உடைத்து வறுத்தது
வெங்காயம்            \& ஒரு கப் நறுக்கியது
தேங்காய்            & 1
பச்சை மிளகாய்            & 5  சிறு துண்டுகளாக நறுக்கியது
கருவேப்பிலை            & ஒரு ஆர்க்
எண்ணெய்            & தேவையான அளவு

மைதா + பச்சரிசி மாவு (அல்லது இட்லி மாவு மீதத்தை) இரண்டையும் தண்ணீர் சிறிது விட்டு கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். ரவையை சிறிது நீர் விட்டு ஊற விடவும்.

இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, 2 ஸ்பூன் எண்ணெயில் தாளிப்பவற்றைப் போட்டு தாளித்து, முந்திரியையும், வறுத்துப்  போட்டு, வெங்காயம் நறுக்கியது + பச்சை மிளகாய் நறுக்கியது + கறிவேப்பிலையும் போட்டு ஒரு வதக்கு வதக்கி மாவில் கொட்டி, சிறிது உப்பு சேர்த்து மாவை சற்று தண்ணீராக வைத்துக் கொள்ளவும்.

கரண்டியில் எடுத்து சுட வைத்திருக்கும் தோசைக் கல்லில் அள்ளித் தெளிந்த மாதிரி லேசாக ஊற்றி, பின் இருபுறமும் எண்ணெய் விட்டு தோசை மொறு மொறுவென வெந்ததும் எடுத்து விடவும்.

சாதம் வடித்த கஞ்சித் தண்ணீரில் கேப்பைக் கூழ் கிண்டினால் கூழ் மிகுந்த வாசனையுடன் இருக்கும்.