-
உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்
விருப்பப்படுவது மனிதனின் இயல்பு. ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றின் மீது விருப்பம் கொள்வார்கள். அது மனிதர்களின் மீதாகட்டும் அல்லது ஏதாவது ஒரு பொருளின் மீதாகட்டும் அல்லது ஏதாவது ஒரு செயல் அல்லது பழக்கத்தின் மீதாகட்டும். இந்த விருப்பம் ஒரு உச்ச கட்டத்திற்கு போகும் போது ஆவலாக மாறுகிறது. ஆவல் என்பது நம் வாழ்க்கையில் பொதுவான ஒன்று தான். விருப்பம் உச்ச நிலையை அடைவதால் சில வகையான ஆவல்கள் நல்லதையே செய்தாலும், சில வகையான ஆவல்கள் முக்கியமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஆவல் என்பது பல வகைபடும். மதுப்பழக்கம், புகைப்பிடிப்பது போன்றவைகள் தீய ஆவலுக்கான சில உதாரணகள். இப்படி தீய ஆவல்கள் உங்களை மட்டும் பாதிக்காமால், அடுத்தவர்களையும் பாதிக்கும். அதனால் தீய ஆவல்களை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். நம்மில் பல பேருக்கு நாம் கொண்டிருக்கும் ஆவல் தவறு என்பதே தெரியாத அளவுக்கு, அதில் மூழ்கி போயிருப்போம். ஆகவே உடல்நல ஆரோக்கியத்தை பேண வேண்டும் என்றால் கீழ்க்கூறிய பட்டியலில் இருக்கும் தீய ஆவல்களை தவிர்க்க வேண்டும்.
புகைபிடித்தல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041630-1-smoking.jpg&hash=cfd30dc8ac0f82bfc51a5bd269d8876b82eef3f2)
பிறந்த நாளையோ அல்லது வெற்றியையோ கொண்டாட வேண்டுமானால், அப்போது சிகரெட் பிடிக்காமல் கொண்டாடுவது நல்லது. ஏனெனில் புகைப்பிடிப்பதால் அல்லது அந்த இடத்தை புகை மண்டலமாக மாற்றுவதால், உங்கள் உடல்நலமும் மற்றவர்களின் உடல்நலமும் வெகுவாக பாதிப்படையும். அதிலும் இரத்தம் உறைந்து வேகமான இரத்த ஓட்டத்திற்கு தடையாக இருக்கும். இந்த இரத்த உறைவு, தினமும் ஒரு சிகரெட் பிடிப்பதன் விளைவாக கூட ஏற்படலாம். அப்படி இரத்தத்தில் உறைவு ஏற்படும் போது, இரத்தக் குழாய்களிலும் உறைவு ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.
-
பற்களை சுத்தப்படுத்தாமல் தூங்கச் செல்வது
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041673-3-brush.jpg&hash=6222272710071a4eae3f74b852cf77d87a552f15)
கடினமான நாளின் முடிவில் அனைவரும் செய்யும் பொதுவான ஒன்று தான் இது. இரவு உணவை முடித்தவுடன், நம்மில் பலர் உடனே தூங்கச் செல்வோம். ஆனால் இந்த பழக்கத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தூங்கச் செல்லும் முன் பற்களை துலக்காமல் இருந்தால், பற்களில் பாக்டீரியா வளர்ச்சியடையும். இதனால் ஈறுகளில் தொற்று ஏற்பட்டு, பற்கள் சொத்தையாகிவிடும்.
-
சருமத்தை அடிக்கடி தொட்டுப் பார்ப்பது
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041689-4-pimple.jpg&hash=81f3369610445f5b64fe66660274391addcd2a15)
தோற்றம் அனைவரையும் கவர வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. அதன் விளைவாக சிறு இடைவேளையில் அடிக்கடி முகத்தை தடவி பார்த்துக் கொள்ளும் வழக்கம் ஏற்படுவதுண்டு. ஆனால் முகத்தில் முகப்பரு இருந்தால், அதனை திரும்பத் திரும்ப கிள்ள வேண்டாம். ஏனெனில் திரும்பத் திரும்ப இப்படி முகத்தை தொடுவதால், சருமமானது பாதிப்புக்குள்ளாகும்.
-
அளவுக்கு மீறி குடிப்பழக்கத்திற்கு உள்ளாவது
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041707-5-wine.jpg&hash=c17e62f917d62440225ae6d24381224bf0d1bf58)
அளவுக்கு அதிகமாக மதுவை குடிப்பதால், உலகம் முழுவதும் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், இறந்தும் போகின்றனர் என்று டாக்டர் விஹாங் கூறியுள்ளார். மேலும் அளவுக்கு அதிகமாக குடிப்பதால், ஈரலில் தொந்தரவு, உடல் எடை அதிகரித்தல், மயக்கம் மற்றும் சோர்வு போன்ற நீண்ட கால உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே இந்த பிரச்சனைகளில் இருந்து காத்துக் கொள்ள வேண்டுமானால், எதையும் அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும்.
-
ஆரோக்கியமில்லாத ஜங்க் உணவை உட்கொள்வது
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041723-6-junkfood.jpg&hash=f01203f07142286201f1e5456623207aeb79cd68)
வாரத்திற்கு ஒரு முறை ஜங்க் உணவை சாப்பிடுவதால், இடுப்பளவு அதிகரிக்கப் போவதில்லை. ஆனால் இதையே தினமும் சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருந்தால், அது உடல்நலத்தை கண்டிப்பாக பாதிக்கும். இவ்வகை உணவுகளில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு, சர்க்கரை, காரம் மற்றும் செயற்கைப் பொருட்கள் உள்ளதால், அது உடலுக்கு கேடு விளைவிக்கும். மேலும் பாஸ்ட் ஃபுட்டில் அதிகமான அளவில் கெட்டக் கொழுப்புக்கள் நிறைந்துள்ளதால், இதை சாப்பிட உடலில் கெட்ட கொழுப்பானது அதிகரித்து, இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி இரத்த ஓட்டத்தை பாதிக்கும்.
-
தொலைக்காட்சியை நண்பனாக்கி கொள்வது
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041743-7-watchingtv.jpg&hash=eea3b5d6e133daa3f61e389ef0d6a35d37c67ea7)
மணிக்கணக்கில் வீட்டு சோபாவில் அமர்ந்து தொலைகாட்சியில் மூழ்கி போவதால், இதயமும் கண்களும் ஆபத்துக்குள்ளாகிறது. குறிப்பாக தொலைக்காட்சியை இடைவிடாமல் பார்ப்பதால், நெஞ்சு வலி, வாதம் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமின்றி, ஒரே இடத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் தொலைக்காட்சியை பார்ப்பதால், உடலில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவும் அதிகரித்துவிடும்.
-
இரவில் தாமதமாக தூங்கச் செல்வது
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041757-8-sleep.jpg&hash=d1f1d9e77499e44c674d8f6c40410bf57ee32caa)
நம்மில் பல பேர் பரீட்சை அல்லது அலுவலக வேலை என்று ஏதாவது ஒரு காரணத்திற்காக, இரவில் நீண்ட நேரம் கண் விழித்து கொண்டிருப்போம். ஆனால் இதுவே தினசரி பழக்கமானால், காலப்போக்கில் உடலானது பாதிக்கப்படும். அதிலும் தினசரி 6-8 மணிநேரம் தூங்கவில்லை என்றால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உடலின் மற்ற செயல்முறையும் பாதிக்கப்பட்டுவிடும். உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைவதால், கிருமிகளை எதிர்க்கும் சக்தியும் குறைந்து, அடிக்கடி நோய்வாய்ப்பட வேண்டியிருக்கும்.
-
எப்போதும் இசை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041775-9-music.jpg&hash=4952f997a03ee1d36057da8caf304aa33a3d882b)
இசை என்பது பல பேருக்கு நாள் முழுவதும் கூடவே வரும் தோழனாவான். பயணம் செய்யும் போதோ அல்லது வேலை செய்யும் போதோ, நேரத்தை போக்குவதற்கு, இசையை கேட்பதுண்டு. ஆனால் மணிக்கணக்கில் இடைவேளையே இல்லாமல், இசையை ஒலிக்கச் செய்திருந்தால், இதனை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும்.
-
உயரமான ஹீல்ஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041788-10-heels.jpg&hash=e4afdcab42e3f60993d3e119d2f20ed11632d7e3)
செருப்பை விரும்பும் பெண்கள் தினமும் உயர்ந்த ஹீல்ஸ் உள்ள செருப்பை அணியும் பெண்களுக்கு உடலில் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இது அவர்களின் தோரணையை பாதித்து, மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால் கீல்வாதம், முதுகு வலி, தசைகளில் காயங்கள் மற்றும் விபத்துகளையும் கூட ஏற்படுத்தும்.
-
உணவை நண்பனாக்கி கொள்வது
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041806-11-unhealthyfood.jpg&hash=31252cd3063982a79974d4fc747a681b044a8e3f)
நிறைய பேர் சாப்பாட்டின் மேல், அளவுக் கடந்த ஈடுபாட்டுடன் இருப்பார்கள். இப்படி ஈர்க்கப்பட்டு, இஷ்டத்திற்கு சாப்பிட்டால், சீராக சாப்பிடும் முறையில் பிரச்சனைகள் ஏற்படும். அதனால் பசி எடுப்பதை உணர முடியாமல் போகும். இதனால் வயிறு நிறைந்த போதும் அதிகமாக சாப்பிடக்கூடும். இப்படி அதிகமாக உண்ணும் உணவு, உடலில் கெட்டக் கொழுப்பாக தேங்கிவிடும். மேலும் இது உடலில் உள்ள கலோரிகளை அதிகரித்து சர்க்கரை நோய், இதய பிரச்சனைகள் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்கும்.
-
மாத்திரை உண்ணும் பழக்கம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041819-12-tablets.jpg&hash=f47541b9319f87551da55b90def9c86de80f8ff2)
எப்போதும் வரும் தலை வலி, மாதவிடாய் அல்லது வயிற்று பிரச்சனைகளுக்கு மாத்திரைகளை சாப்பிடுகிறீர்களா? முதலில் அதை நிறுத்த வேண்டும். எதற்கெடுத்தாலும் மாத்திரை சாப்பிடுவது என்பது மிகவும் ஆபத்தான பழக்கமாகும். அது உடல்நலத்தை வெகுவாக பாதிக்கும். எனவே எந்த மாத்திரை சாப்பிடுவதாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று, பின்னரே அவைகளை சாப்பிட வேண்டும்.
-
காலை உணவை தவிர்ப்பது
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041839-13-fasting.jpg&hash=2eb6442438f21ea84fcb895b3473f90d1d9755c0)
காலை உணவு என்பது அந்த நாளில் நாம் உண்ணும் முக்கியமான உணவாகும். ஒரு கப் காபி மற்றும் சிறு ரொட்டி துண்டுடன் காலை உணவு முடிந்துவிட்டதா? அப்படியானால் ஆரோக்கியமில்லாத எதிர்காலத்திற்கு விதை போடுகிறீர்கள் என்று அர்த்தம். அதுவும் காலை உணவை சரியான அளவில் உண்ணவில்லை என்றால், செரிமான அமைப்பு பாதிக்கப்பட்டுவிடும். இது உடலின் ஆற்றல் மற்றும் மெட்டபாலிசத்தையும் பாதிக்கும்.
-
உடற்பயிற்சியை தவிர்ப்பது
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041869-14-exercise.jpg&hash=78678469a91884f5b95fcb81e896f142d24efcef)
தினமும் செய்யக்கூடிய உடற்பயிற்சி அட்டவணையில் இருந்து சிறிது ஓய்வு எடுப்பது தவறில்லை. ஆனால் தொடர்ச்சியாக அதற்கு ஓய்வு கொடுப்பது தான் தவறு. அதுவும் உண்மையிலேயே முக்கிய காரணங்கள் இருந்தால் மட்டுமே தவிர, மற்ற எந்த காரணங்களுக்காகவும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டாம்.
-
இனிப்புகளுக்கு அடிமையாவது
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041893-15-sweets.jpg&hash=1d15259f9f6d1ccf9855b1158de4b5c8c776dde7)
இனிப்புகளுக்காக ஏங்குபவர்கள், தினமும் அதிக அளவில் இனிப்புகளை சாப்பிடுவார்கள். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிக அளவில் உயரும். இதனால் உடலில் இன்சுலினை அதிகமாக சுரக்கச் செய்து, பசியை அதிகரிக்கும். அதனால் எப்போதாவது மட்டும் இனிப்பு உண்ணும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.
-
தனிமையில் இருப்பது
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041910-16-alone.jpg&hash=595ce7ce8e8adc9dd4afe28d095367b8f77760b5)
இந்த உலகத்தை விட்டு விலகி தனிமையில் இருக்க சிலர் விரும்புவார்கள். அதனால் எந்த ஒரு பிணைப்புமின்றி, தனிமையிலேயே இருப்பார்கள். தனிமை என்பது நம் மனதிற்கு நல்லதல்ல. அது உடலின் நோய் எதிர்ப்பு திறனை குறைத்து, உடல் நலத்தை பாதிக்கும்.
-
அதிகமாக காபி அருந்துவது
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041930-17-coffee.jpg&hash=58a9bdd866c88075253aebd7e032007f4b20bbfd)
கூடுதலாக குடிக்கும் ஒவ்வொரு கப் காபியும், உடலுக்கு பல வகையான உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும். மேலும் காபியில் இருக்கும் நுரை போன்றவைகள் உடலின் கலோரிகளை அதிகரிக்கும்.
-
வேகமாக உண்ணுதல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041950-18-overeating.jpg&hash=8343ca842cc9123cf160c39418995a3389f9481e)
வீட்டு டைனிங் டேபிளில் பல உணவு வகைகளை காணும் போது, அவை அனைத்தையும் சுவைத்துப் பார்க்க வேக வேகமாக சாப்பிடுவோம். இப்படி சாப்பிடுவதால் செரிமான அமைப்பு பாதிப்படையும். ஆகவே உப்புசம் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தவிர்க்க, சீரான முறையில் எவ்வளவு முடியுமோ அதனை மட்டும் சாப்பிடுவது நல்லது.
-
இறைச்சி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041971-19-meat.jpg&hash=e6feec84d552dcaac0e9cad87c8620a58b38247a)
இறைச்சி என்பது சுவைமிக்க உணவாகும். அதனை வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயாரிக்கலாம். ஆனால் பன்றிக்கறி போன்ற சிவப்பு இறைச்சிகளை அடிக்கடி சாப்பிட வேண்டாம். ஏனெனில் பன்றி இறைச்சியில் கொழுப்பு அதிகமாக இருப்பதால், அது இதயகுழலிய நோய் மற்றும் பெருங்குடல், மலக்குடலுக்குரிய புற்றுநோயை உண்டாக்கும்
-
தினசரி எடையை சரிபார்ப்பது
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F17-1374041984-20-weightloss.jpg&hash=37bb86d329111bbd4fd85075709849ca494e0b79)
எடையை குறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் தினமும் எடையை சரிபார்க்க முற்படுவீர்கள். தினமும் எடையை பார்ப்பதால், மனரீதியாக அதிகமாக சாப்பிட தோன்றாது. அதனால் தேவையான உணவை உண்டு, சிறிது இடைவேளையில் எடையை சரிபாருங்கள்.