ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஓட்ஸ் மில்க் ஷேக்
இதுவரை எத்தனையோ மில்க் ஷேக் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஓட்ஸ் மில்க் ஷேக் பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், ஓட்ஸை வைத்து வித்தியாசமான சுவையில் மில்க் ஷேக் செய்யலாம். அதிலும் ஓட்ஸ் உடன், ஸ்ட்ராபெர்ரி சேர்த்து மில்க் ஷேக் செய்தால், சூப்பராக இருக்கும்.
இப்போது அந்த ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஓட்ஸ் மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F06%2F10-oats-strawberrymilkshake-600.jpg&hash=42399f3d31bae70ea92588b91bbe3b595f6a559c)
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி - 10-12
வறுத்த ஓட்ஸ் - 1/4 கப்
குளிர்ந்த பால் - 1 கப்
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஸ்ட்ராபெர்ரியை கழுவி, இலையை நீக்கிவிட்டு, நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் பிளெண்டர்/மிக்ஸியில் வறுத்த ஓட்ஸ், ஸ்ட்ராபெர்ரி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, 1-2 நிமிடம் நன்கு மென்மையாகும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் அதனை ஒரு டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சூப்பரான ஸ்ட்ராபெர்ரி ஓட்ஸ் மில்க் ஷேக் ரெடி!!!