FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 16, 2013, 02:17:26 PM

Title: ~ வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள் ~
Post by: MysteRy on July 16, 2013, 02:17:26 PM
வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்

வாரம் முழுவதும் வேலை, சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் தூக்கம் என்று இயந்திரமயமாகிவிட்டது வாழ்க்கை. வாழ்க்கையை சற்று திரும்பி பார்த்தால், தூக்கம், உழைப்பு என்கிற இரண்டே காரியங்கள் தான் இருப்பதாகத் தோன்றும். உபயோகமாக ஏதாவது செய்யலாம் என்று நினைத்தால், அதற்கு வார நாட்கள் பொருத்தமாக இருக்காது. வேலை செய்து களைத்துப் போய் வீடு திரும்பியதும் படுத்து உறங்குவதற்கே நேரம் சரியாக இருக்கும்.

அதிலும் வார இறுதி என்றதுமே குதூகலம் அடைந்துவிடுகிறோம். மகிழ்ச்சியாக களிக்கவும், ஓய்வெடுக்கவும் இரண்டு நாட்கள் கிடைத்துவிட்டது என்கிற எண்ணம் ஏற்படுகிறது. ஆனால், வாரம் முழுவதும் கடினமாக உழைத்த பிறகு உறங்குவதையும், நண்பர்களோடு ஊர் சுற்றுவதையும் தவிற உபயோகமாக என்ன செய்ய முடியும்?

எத்தனை ஆண்டுகள் இப்படியே வார இறுதிகளை வீணாக்குவது. வீட்டில் ஒரு அட்டவணை போட்டு, அதில் வாரம் முழுவதும், வார இறுதியிலும் செய்யும் வேலைகளை பட்டியலிட்டால், நம் மீதே நமக்கு கோபம் வரும். இரண்டு நாட்கள் எப்போது வரும் என்று காத்திருந்த பின்பு, வார இறுதியின் முடிவில் எதையும் சாதிக்காத ஒரு குற்ற உணர்வே காணப்படுகின்றது. ஆனால், இதற்கு ஒரு மாற்று வழி இருக்கிறது. படுக்கையிலே புரண்டு, தொலைக்காட்சி பார்ப்பதற்கு, பதிலாக கீழே குறிப்பிட்டுள்ள ஆரோக்கியமான விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள்.



அதிகாலையில் விழித்திடுங்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F11-1368255589-1-wakeup-600.jpg&hash=4efd9f262386cb2ebe2e0ed2129c7e00767e12d6)

அதிகாலையில் எழுவது நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்பட உதவியாக இருக்கும். அதற்கு வீட்டிற்கு வெளியே சென்று நடைபயில்வது, ஓடுவது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.
Title: Re: ~ வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள் ~
Post by: MysteRy on July 16, 2013, 02:18:21 PM
படுக்கையில் ஆசனங்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F11-1368255622-2-wakeup-600.jpg&hash=38879a98fc889f38365b14222fe652cbdc4a7ebe)

கடிகாரத்தை நிறுத்தியவுடன், உடனடியாக எழுந்துவிடாமல், உடலை நீட்டி சில பயிற்சிகளை செய்யவும். அதுவும் முதுகெலும்பை வளைத்து செய்யும் பயிற்சிகள் அல்லது நாள் முழுவதும் உடலுக்கு ஆற்றல் அளிக்கும் ஏதாவது ஒரு பயிற்சியை செய்யுங்கள்.
Title: Re: ~ வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள் ~
Post by: MysteRy on July 16, 2013, 02:19:17 PM
புதிய முயற்சி செய்யுங்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F11-1368255643-3-homework-600.jpg&hash=5283d1753b989617ccb10fd3c28a4889a0669830)

வார நாட்களில் செய்ய தவறிய செயல்களை செய்வதற்கு சிறந்த நேரம் தான் வார இறுதிகள். இவ்வாறு செயல்படுவதை பழக்கப்படுத்திக் கொண்டால், அது அழுத்தத்தையும், மன உளைச்சலையும் விடுவிக்க உதவியாக இருக்கும்.
Title: Re: ~ வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள் ~
Post by: MysteRy on July 16, 2013, 02:20:08 PM
அமைதியான குளியல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F11-1368255674-4-bathd-600.jpg&hash=5f8b57075d85c3ddd0bab669907212642f9b9c74)

காரணமாக, வார நாட்களில் குளியலுக்கு என்று அதிக நேரம் செலவு செய்வது இல்லை. ஆனால் வார இறுதியில் உடலுக்கு புத்துணர்வு அளிக்க வீட்டிலேயே செய்த சில உடல் துப்புறவு சாதனங்களைப் பயன்படுத்தி அமைதியாக குளிக்கவும்.
Title: Re: ~ வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள் ~
Post by: MysteRy on July 16, 2013, 02:20:59 PM
ஆரோக்கியமான காலை உணவு

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F11-1368255696-5-breakfastd-600.jpg&hash=5a8b5a7918b461738ca47057021c9f0b0a6bde5c)

ஆரோக்கியமான காலை உணவை தயாரித்து சாப்பிடவும். ஆரோக்கியமாண வாழ்வுக்கு ஆரோக்கியமான காலை உணவு அவசியம். காலை உணவு சாப்பிடும் பழக்கம் இல்லை என்றால், இந்த வார இறுதியில் இருந்து அதை பழக்கப்படுத்துங்கள், பிறகு அதை தொடர்ந்து செய்யுங்கள்.
Title: Re: ~ வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள் ~
Post by: MysteRy on July 16, 2013, 02:21:50 PM
உடற்பயிற்சி வகுப்புகளை முயற்சி செய்யுங்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F11-1368255717-6-class-600.jpg&hash=2a781bf7f4509248ffdc33d51ff5e2be65aa0890)

உடலுக்கும் மனதிற்கும் பயனளிக்கக்கூடிய புதுமையான காரியம் எதையாவது முயற்சி செய்ய வார இறுதிகளே சிறந்த காலம். இந்த வார இறுதியில் யோகா, சாம்பா, நடனம் போன்ற ஏதாகிலும் ஒரு உடற்பயிற்சி வகுப்பில் சேருங்கள்.
Title: Re: ~ வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள் ~
Post by: MysteRy on July 16, 2013, 02:22:48 PM
அதிகமாக குடிப்பதை தவிர்க்கவும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F11-1368255766-8-drinkds-600.jpg&hash=b8898e72971c710e6807ce7ffa40dc680f9691ff)

நண்பரோடு ஊர் சுற்றுவதாக இருந்தால், இயன்றவரை மதுபானத்தை தவிர்க்கவும். குறைந்த அளவில் மது அருந்துவது ஓய்வெடுக்க உதவும். ஆனால் அடுத்த நாள் வரை மயக்கத்தில் இருக்கும் அளவுக்கு குடிக்காதீர்கள்.
Title: Re: ~ வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள் ~
Post by: MysteRy on July 16, 2013, 02:23:44 PM
உங்களுக்கென்று சற்று நேரம் செலவிடுங்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F11-1368255795-9-hobbyds-600.jpg&hash=57816c179b6e5192696e71bd4c9c2f72ef117666)

களைப்பு அடையாமல் தடுப்பதற்காக, சில பொழுதுபோக்கு செயல்களை செய்யுங்கள்.
Title: Re: ~ வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள் ~
Post by: MysteRy on July 16, 2013, 02:24:51 PM
ஓடி விளையாடுங்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F11-1368255819-10-cricket-600.jpg&hash=469408bc607d9a47c7eb2101bbc0a39039e5b61b)

வீட்டிற்கு வெளியே விளையாடக்கூடிய கால்பந்து, ரக்பி, கூடைப்பந்து அல்லது கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை விளையாடுங்கள். வார இறுதியை செலவிடுவதற்கு இது ஒரு சிறந்த ஆரோக்கியமான வழி.
Title: Re: ~ வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள் ~
Post by: MysteRy on July 16, 2013, 02:26:01 PM
சில வீட்டு வேலைகளை செய்யுங்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F11-1368255846-11-cleaningds-600.jpg&hash=c4ae836d2cc9314c2243da28b842fe0aa2f5e8d5)

வீட்டு வேலைகளை செய்வது, வார இறுதியை செலவிட மற்றொரு வழி ஆகும். துடைப்பத்தை எடுத்து வீடு முழுவதையும் சுத்தம் செய்யுங்கள். இச்செயல் உடல் முழுவதற்கும் பயிற்சி அளிப்பதோடு, வீட்டையும் பளிச்சிட செய்யும்.
Title: Re: ~ வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள் ~
Post by: MysteRy on July 16, 2013, 02:26:57 PM
அதிகமாக தண்ணீர் அருந்துங்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F11-1368255893-13-waterds-600.jpg&hash=24cb15858edc2e936b8b6c126c2deb2e31605efc)

தொடர்ந்து கழிவறைக்கு செல்ல பயந்து, நம்மில் பலர் வார நாட்களில் அதிகமாக தண்ணீர் குடிக்க தவறுகிறோம். கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் உடலில் நீரை அதிகரிக்கும்படி தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை, இந்த வார இறுதியில் இருந்து தொடங்குங்கள். வாழ்நாள் முழுவதும் அந்த பழக்கத்தை கைவிடாதீர்கள்.
Title: Re: ~ வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள் ~
Post by: MysteRy on July 16, 2013, 02:27:46 PM
தொழில்நுட்பத்திற்கு சற்று இடைவெளி கொடுங்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F11-1368256010-cellphone8-3600.jpg&hash=2870d3814663c02b516bb6a3b4288fe367bf06a4)

வாரயிறுதிகளில் தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். மற்றவர்களோடு தொடர்பு கொள்ள இந்த கருவிகள் உதவினாலும், எப்போதும் அவை அலுவலாகவே வைத்திருக்கின்றன. அமைதியான வாரயிறுதி வேண்டும் என்றால், தொலைப்பேசி, கணிப்பொறி மற்றும் சமூக வளைதளங்களில் இருந்து விடுபட்டு இருக்க வேண்டும்.
Title: Re: ~ வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள் ~
Post by: MysteRy on July 16, 2013, 02:28:40 PM
சரும பாதுகாப்பு செய்திடுங்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F11-1368256039-15-face-s-600.jpg&hash=f2ee3e4084b5ccfbced94f42dbc1ac780161ba76)

குளிர்சாதனம் நிறைந்த அலுவலகம் சருமத்தை உலர்வாகவும், பொலிவில்லாமலும் மாற்றிவிடும். இந்த பொலிவற்ற சருமத்தில் இருந்து விடுதலை பெற அவற்றை உதிர்த்துவிட வேண்டும். அதற்கு உப்பு மற்றும் சர்க்கரை ஸ்க்ரப் சிறந்த தோல் உதிர்வுக்கான தீர்வு ஆகும். 1/4 கப் உப்பு அல்லது சர்க்கரையை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு ஆலிவ் எண்ணெயை ஊற்றவும். இந்த கலவையை கடைந்து, சருமம் முழுவதுமாக தேய்த்து, இறந்த தோல்களை நீக்கிவிடுங்கள். முடிந்த பிறகு நன்றாக சருமத்தை கழுவுங்கள்.
Title: Re: ~ வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள் ~
Post by: MysteRy on July 16, 2013, 02:29:28 PM
சிறந்த பொலிவை பெற்றிடுங்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F11-1368256061-16-beautyds-600.jpg&hash=bc422aacdf7b120b82028a332953ba1c913d280e)

சிறந்த பொலிவுக்கு ஆரஞ்சு அல்லது தக்காளி சாற்றை எடுத்து, அதோடு இரண்டு டீஸ்பூன் தயிரை சேர்க்கவும். இந்த கலவையை தேய்த்து, மேல்நோக்கி சருமத்தில் மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் அது உலர்ந்த பிறகு, குளிர்ந்த தண்ணீரில் அதை கழுவி விட்டு, பின்பு அதை நன்றாக துடைத்து விடுங்கள்.
Title: Re: ~ வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள் ~
Post by: MysteRy on July 16, 2013, 02:30:19 PM
கருவட்டங்களை நீக்கிடுங்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F11-1368256087-17-darkcirclesd-600.jpg&hash=3a8bfc59dedf0300e499c9a02ff8b5a1482f8965)

தேனீர் பைகளை தேய்ப்பதன் மூலம் கருவட்டங்களை நீக்குங்கள். சமோமைல் அல்லது பச்சை தேனீர் பைகளில் இருக்கும் உயர்ந்த ஊட்டச்சத்து, அதிகபட்ச பலனை கொடுக்கின்றன.
Title: Re: ~ வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள் ~
Post by: MysteRy on July 16, 2013, 02:31:16 PM
கோவைப்பழ உதடுகளுக்கு

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F11-1368256112-18-lips-600.jpg&hash=91eaf890fb9b67406fa7615176b98909ead1d394)

ரோஜா இதழ்கள், மலாய் மற்றும் தேனை உதட்டில் தேய்த்து 15 நிமிடங்கள் விட்டுவிடுங்கள். இந்த சிகிச்சை உதடுகளில் இருக்கும் இறந்த தோல்களை நீக்கி, உதடுகள் முழுவதும் சிவப்பாக மாற உதவுகின்றது.
Title: Re: ~ வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள் ~
Post by: MysteRy on July 16, 2013, 02:32:03 PM
சூடான எண்ணெய் மசாஜ் தலைக்கு

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F11-1368256135-19-oilmassageds--600.jpg&hash=6219eb320e7002f6c5ecde51c93ce5da3c401b0f)

நல்ல எண்ணெய் மசாஜ் செய்யவும். அதிலும் சிறந்த பலனை பெற, வெள்ளிக்கிழமை இரவு இந்த எண்ணெய் மசாஜ் செய்துவிட்டு, பிறகு காலையில் எலுமிச்சை மற்றும் வினிகர் கலவையை தேய்த்துவிட்டு, பிறகு அலசினால் பளிச்சிடும் பட்டுப்போன்ற கூந்தல் கிடைக்கும்.