FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 16, 2013, 11:05:11 AM

Title: ~ வாழையடி வாழை! வாழைத்தண்டியின் மருத்துவ குணங்கள்..! ~
Post by: MysteRy on July 16, 2013, 11:05:11 AM
வாழையடி வாழை!
வாழைத்தண்டியின் மருத்துவ குணங்கள்..!


(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-frc1/995725_340504542749272_1092829148_n.jpg)


என்ன சத்துக்கள்?

அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது.

பலன்கள்

கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.

ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும்.

அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.

இரண்டு ரெசிபி

1) வாழைத்தண்டு ஜூஸ்
வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

2) வாழைத்தண்டு மோர்
வாழைதண்டு- 6
தயிர்- 1 லிட்டர்
இஞ்சிச் சாறு- 1 ஸ்பூன்
எலுமிச்சை இலை - 5 அல்லது 6
பெருங்காயத்தூள்- சிறிது
உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை:

வாழை தண்டிலிருந்து நாரினை நீக்கவும்.

வாழைத் தண்டை துண்டு துண்டாக நறுக்கி சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி வைக்கவும். மீதமுள்ள தயிரைக் கடைந்து தாராளமாக நீர் ஊற்றி ஐஸ்போட்டோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ குளிரவைக்கவும்.இதில் வடி கட்டி வைத்துள்ள வாழை தண்டு சாற்றை கலக்கவும்.

இஞ்சிச்சாறு, உப்பு, பெருங்காயத்தூள்சேர்க்கவும்.

எலுமிச்சை இலையை கசக்கி மோரில் போடவும்.

வயிற்று உப்பிசம், வயிற்று கோளாறு நீங்கும். கிட்னி ஸ்டோன் உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு சிறந்த பலனை தரும். நீர் கடுப்பு நோய் உள்ளவர்களுக்கு உபாதைகளை நீக்கும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகி வர பருமன் குறையும்.