FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on July 12, 2013, 04:35:02 PM

Title: பாரதம்
Post by: Maran on July 12, 2013, 04:35:02 PM
புடவை, தாவணியை
மறந்த பெண்கள்.

வேட்டி, கதர்சட்டை
மறந்த ஆண்கள் .

கபடி, கண்ணாமூச்சி
மறந்த குழந்தைகள்.

சிலம்பு, களரியாட்டம்
மறந்த வீரர்கள்.

கூட்டுக் குடித்தன பயன்
மறந்த தனிக்குடித்தனகள்.

பசு, எருமைப் பால்
மறந்து பாக்கெட் பால்
குடிக்கும் மழலைகள்.

கிராமிய, நாட்டுப்புறக் கலைகள்
மறந்த மனங்கள்.

விஞ்ஞான வசதியால்
மண்வாசனை மறந்த
கிராமங்கள்.

பக்கத்து வீட்டாரின் பெயர்,
தொழில் தெரியாத
இவர்கள் சொல்லுகிறார்கள் ...

பண்பாடும்,
கலாச்சாரமும்
பாரதத்தின்
அடையாளம் என்று !

- Maran
Title: Re: பாரதம்
Post by: பவித்ரா on August 07, 2013, 02:45:04 AM
நிதர்சன உண்மைடா மாறாஆனா இந்த இயந்தர உலகத்துல நடைமுறைக்கு ஒத்து வரல மக்களுக்கு நல்லா எழுதி இருக்க  தொடர்ந்து எழுது
Title: Re: பாரதம்
Post by: Yousuf on August 20, 2013, 06:52:36 AM
பொய்யும்
புரட்டும்
லஞ்சமும்
குடியும்
கற்பழிப்பும்
ஏமாற்றலும்
அடக்குமுறையும்
அநியாயமும்
வட்டியும்
வரதட்சனையும்
தான் இன்றைய பாரதத்தின் அடையாளம்!

நல்ல கவிதை மாறன் வாழ்த்துக்கள்!
Title: Re: பாரதம்
Post by: Maran on November 02, 2014, 12:46:29 PM



 :) என் கவிதையை ரசித்துப் பாராடியதிற்க்கு மிக்க நன்றி.. பவி அக்கா மற்றும் யூசப் நண்பா...