FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on July 12, 2013, 12:41:23 AM

Title: நீ நடந்த பாதையில்
Post by: Varun on July 12, 2013, 12:41:23 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.andhrareporter.com%2Fimages%2FA-Tollywood%2Fsamantha%2FSamantha_from_Neethane_En_Ponvasantham_Photos04.jpg&hash=89966f5065f45680a8f09b31f20c213fcd0b1575)


இருவரும் ஜோடியாய்
இணைந்து நடந்த சாலையில்
நான்மட்டும் நடக்கிறேன்
தனிமையில் தவிக்கிறேன் .......

உன் விரல்களை பற்றி
நடந்த இடங்களில் எல்லாம்
உன் நினைவுகளை சுமந்து
வெறித்துக்கொண்டிருக்கிறேன் .........

இணையான துணையாய்
இனிமையான வரமாய்
ஜோடியாய் திரிந்த நிலைமைமாறி
என் நிழல் மட்டும் என்னோடு .........

அருகருகே உட்கார்ந்து
அன்பாய் பேசிசிரித்த
பூங்கா நாற்காலிகளில்
நான்மட்டும் தனித்திருக்கிறேன் ............

பணம் தேவையில்லை
மனம்போதும் என்றவளே
குணம்மாறி நீபோனாய்
மனநோயாளி நானானேன் ..........

மெய்யாய் வைத்த காதல்
பொய்யாய் போனபோதுகூட
புன்முறுவலை உனக்கு பரிசளித்தேன்
பூவையேஉனை தொடர்ந்துநேசித்தேன் .........

இடையில் வந்தவளே
இடையிலே போய்விட்டாய்
இறுதிமுடிவை தெரியாமல்
ஏக்கத்தோடு சுற்றுகிறேன் ..........

உனக்காக சிகைவெட்டி
சிங்காரித்து அழகுசேர்த்த முகத்தை
இன்று அலங்கோலபடுத்துகிறது
என்னுடைய நீண்ட தாடி .........

கலர் கலரான சட்டையெல்லாம்
கிழிந்து கந்தலாகிவிட்டது
மனம் போய்விட்டதால்
மானம்போவது தெரியவில்லை ...........

வழிபார்த்து காத்திருந்த கண்கள் இன்று
உன்முகம் பார்க்க காத்துகிடக்க
பறந்துபோன கிளியே உன்
பார்வைக்காக காத்திருக்கிறேன் ...........

நீ நடந்த பாதைஎல்லாம்
நான் நடக்கிறேன் தனியாக
உன்நினைவுகளை சுமந்தததனால்
சுமைதாங்கி ஆகிவிட்டேன் .............
Title: Re: நீ நடந்த பாதையில்
Post by: பவித்ரா on August 02, 2013, 09:20:46 PM
மனம் போய்விட்டதால்
மானம்போவது தெரியவில்லை ...........


nalla eluthi iruka mutta bonda nice