FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Forum on July 10, 2013, 11:33:11 PM

Title: FTC இரண்டாம் ஆண்டு நிறைவு கவிதை
Post by: Forum on July 10, 2013, 11:33:11 PM
நண்பர்கள் கவனத்திற்கு ... நம் அரட்டை மற்றும் பொது மன்றத்தின் இரண்டாம் ஆண்டு  நிறைவை முன்னிட்டு ... இந்த கவிதை பகுதியில் நீங்கள் உங்கள் உங்களின் கற்பனை திறமைய வெளிப்படுத்தும்  பொருட்டு  கவிதை மழைகளை  பொழியலாம் ... கவிதை நம் நண்பர்கள் இணையத்தளம் சார்ந்ததாய் மட்டுமே அமையவேண்டும் .. எதிர்வரும் 17 ம் திகதிக்கு முன்பாக  உங்கள் கவிதைகளை பதிவு செய்யுமாறும்  கேட்டுக் கொள்கின்றோம் ..  
Title: Re: FTC இரண்டாம் ஆண்டு நிறைவு கவிதை
Post by: Thavi on July 12, 2013, 01:24:10 AM
நட்புக்கு ஒரு இணையதளம்
நண்பர்கள் இணையதளம்
நன்மைகளையும் தீமைகளையும்
தனித்துகாட்டும் நம் இணையதளம் ...

அறிவு திறமைகளை வளர்க்கவும்
அன்றைய நாட்டு நிலவரங்களை
அறியவும் அறிய வசதிகள்
நிறைந்த ஒரு குட்டி உலகம்
நம் இணையதளம் ....

நாட்கள் நீண்டாலும்
வருடங்கள் கடந்தாலும்
நீங்காமல் நம் மனதில்
நினைவில் உள்ள அறியதளம்
நமது இணையதளம் ......

கற்களை செதுக்கி சிற்பம் செய்யும்
சிற்பிகளை போல ..
பல கலைகளையும் அறியவைத்து
திறமைகளை வெளிக்கொண்டுவரும்
அன்பான அட்மின் நிறைந்த தளம்
நம் இணையதளம் ......

வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களையும்
பல காதலர்களையும் முகம் பார்த்து
உறையாடவும் அவர்கள் உள்ளம் குளிரவும்
பல நவீனவசதிகளுடன் நண்பனை போல
உதவி செய்வது நமது நண்பர்கள் இணையதளம் ....

மனிதனின் ஒவ்வொரு நாளும்
உழைப்பின் களைப்பினை போக்கி
கலகலவென மனதை குளிரவைப்பதும்
நாம் விரும்பும் பாடல்களை
நமது செவிகள்க்கு விருந்து அளிக்கும்
வித்தியாசமான ஒரு இணையதளம்
நமது இணையதளம் ......

எல்லாம் நிறைந்த ஒரு இணைய தளம்
நமது இணைய தளம் ..
நம் தேவைகளை உடனே பூர்த்தி செய்யும்
நமது இணையதளத்தின்.....

 இரண்டாம் ஆண்டு நிறைவு செய்து
மூன்றாம் ஆண்டில் நம்மோடு பயணம் செய்ய
காத்திருக்கும் நமது இணையதளர்த்திக்கு
என்னுடைய மனதார வாழ்த்துகள் !
Title: Re: FTC இரண்டாம் ஆண்டு நிறைவு கவிதை
Post by: jagu on July 17, 2013, 02:16:41 PM
எங்கள் பிறந்தநாளன்று வாழ்தேந்தி நின்ற உனக்கின்று பிறந்தநாள்...

எல்லைகள் என்று ஏதோ ஒன்று எங்களை அதற்குள் அடக்கிவிட்ட போதும்

தமிழ் என்ற ஒன்றை கொண்டு எங்களை உனக்குள் ஒன்று சேர்த்தாய்..

தொலைவில் இருந்த போதும் தோள் தரும் தோழன்  தந்தாய்...

உடன் பிறவா சகோதரர்கள் தந்தாய் . ,

உள்ளூரும் திறமைகளை உலகறிய தளம் தந்தாய்...

இத்தனை தந்த உன்னை எப்படி வாழ்த்தினாலும் தகும்...

இரண்டு வயது குழந்தை நீ... உன்னோடு நாங்களும் குழந்தைகளாய்...

Happiee BirthDay ftc

wishes from jagu & jammu

http://www.youtube.com/watch?v=GOIWeWY0GXU# (http://www.youtube.com/watch?v=GOIWeWY0GXU#)
Title: Re: FTC இரண்டாம் ஆண்டு நிறைவு கவிதை
Post by: Maran on July 17, 2013, 10:12:19 PM
ஒவ்வொரு கணமும்
கனக்கிறது
உடைக்கவே முடியாத
மௌனம்.

மின்னல் முறிவது போல்
வந்து செல்லும்
முகம் தெரியாத
என் நண்பர்களின் உரையாடல் ...
உணர்சிகளின் பதிப்புடைய
உரையாடல்கள் !
மகிழ்ச்சிகள் கலந்த வெளிப்பாடுகள் ....!!

முகம்காண நண்பர்கள் எங்களுக்கு
உரையாட இடம் கொடுத்த ...
களம், தளம் கொடுத்த ...
எங்கள் நண்பர்கள் இணையதளத்திற்கு
நட்புகளுடைய இனிய வாழ்த்துகள் .

எதைப்பற்றியும் பேசலாம்.....

இலக்குகள்
இலட்சியங்கள் பற்றியும்
இளையராஜா
இசை பற்றியும்....

குடும்பம் பற்றியும்
குழந்தைகள் பற்றியும்
சமூகம் பற்றியும்
கவிதை பற்றியும்
நண்பர்கள் பற்றியும்
அவர்களின் காதல்
பற்றியும் கூடப் பேசலாம்.

இது நம் இணையதளம்
நண்பர்கள் இணையதளம்.....

முகம் காணா என் இனிய
இணைய நண்பனே.....
வெளியில் மழையில்லை
மனதில் அடை மழை.

என் இனிய
நட்பு வாழ்த்துக்கள்!!!


- Maran
Title: Re: FTC இரண்டாம் ஆண்டு நிறைவு கவிதை
Post by: kanmani on July 17, 2013, 10:17:09 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1128.photobucket.com%2Falbums%2Fm493%2Fkanmanii03%2Fftc_zpse9ebf20a.gif&hash=706cdf0d2af35e0cb254f46ba7ef7e0fe08374bc)
Title: Re: FTC இரண்டாம் ஆண்டு நிறைவு கவிதை
Post by: suthar on July 17, 2013, 11:31:34 PM
கிறுக்குத்தனமாய் ஒரு கிறுக்கல்......!
கன்னியரும் காளையரும் நகராதபடி
கிறங்கடிக்கும் இணையத்திற்கு வாழ்த்துரைக்க
கிறுக்கு தனமாய் ஒரு கிறுக்கல்...!

கிறக்கமாய் எப்பொழுதும்  இணக்கமாய்
கிறக்கத்தின் உச்சியில் காத்து கிடக்கும்
கிறுக்கு நண்பர்களுக்கு
நறுக்காய் சிலவார்த்தை

நட்பின் வலைத்தளம் உதவியால்
நட்பை யாசித்து பின் வாசித்து
வாசித்த நட்பை சுவாசித்து
சுவாசத்தின் உச்சமாய் நேசித்து
நேசத்தின் வெளிப்பாடே காதல்.....

காதல் பற்று கொண்ட உள்ளம்
பெற்று வளர்த்த பெற்றோரை  மதித்து
அனுமதி பெற்று  மணமுடிக்காமல்
பெற்றோரை அவசொல்லுக்கு ஆளாக்குவது சரியா.....

கண்ணுக்கு கண்ணாய்  கண்ணின் மணியாய்
குழந்தை பருவம் முதல்,
கட்டிளம் காளையர் பருவம் வரை
கவனமாய்  கையாண்ட பெற்றோரை
காதல் வந்த பின்னால்
கிறுக்கு பயபுள்ளையும்
கிறுக்கி மக சிறுக்கியும்
கரை சேர்க்கும் கட்டுமரமென  அறிந்தும்
காலால் உதைக்கும் குணம் கொண்டீரே ......

கருவுக்குள் சுமந்து
கருத்தில் உங்களை நிறுத்தி
கண்ணும் கருத்துமாய் வளர்த்தவர்களை
உதாசீன படுத்துமளவிற்கு
கிறங்கடிக்குமா காதல்.....?

கிறுக்கா இவன் என
கிறுகிறுத்து போய் இருக்கும்
கிறுக்கு நண்பர்களுக்கு மத்தியில்
கிறுக்கு முற்றிலும் தெளிந்த கிறுக்கன்.

நட்பு வலையில் இணைந்த நண்பர்களுக்கும்,
இணைத்த இணையத்திற்கும் கிறுக்கனின் வாழ்த்துக்கள்
இவ்வரிகள் சிரிக்க  மட்டும் அல்ல சிந்திக்கவும் ....!!
Title: Re: FTC இரண்டாம் ஆண்டு நிறைவு கவிதை
Post by: பவித்ரா on July 18, 2013, 12:58:53 PM
உன் முதல் சுவாசத்தை துவங்கி
நண்பர்களை ஒன்று சேர்த்து மகிழ்ச்சியை
மட்டுமே பரிசாய் அளிக்க துவங்கி
வெற்றி நடை போட்டு இரண்டாம் ஆண்டை
 அழகாய்  தொட்டு  இருக்கும்
என் நண்பர்கள் இணைய தளமே ....

நீ போகும் பாதை எங்கும் வெற்றி கனிகள்
உனக்கு மட்டுமே  சாத்தியம்
இது ஒரு தோழமையின் வெற்றி
உன்னை கருவாக்கி அழகாய் உருவாக்கி
வேர்களை விதைத்தனர் இருவர் ....

உதவியாக இருந்தாலும் இட்டபணி
செவ்வனே செய்து வேர்களை அழகாய்
தழைத்து விழதுகளாய் வளர்த்து 
பெருக்கினர்  சில நட்புக்கள் ....

தனித்திறமையை வெளிகொணர்ந்து
தன்னையும் செதுக்கி உன்னையும் செதுக்கி
வெளிதகவல்கள் அனைத்தையும்
உனக்குள் கொண்டு வந்து
சேர்த்த நட்புக்கள் பல ...

நீ சிலரின் சோகத்துக்கு மருந்தாகிறாய்
நீ சிலரின் விரக்திக்கு நம்பிக்கை விதையாகிறாய்
நீ சிலரின் தாகத்துக்கு நீராகிறாய்
நீ சிலரின் திறமைக்கு விருந்தாகிறாய்
நீ சிலரின் தேடலுக்கு வழிகாட்டியாகிறாய் .....

உன்னுள் எவ்வளவு திறமை இருந்தாலும்
உன் அடக்கமே உன் அபார வளர்ச்சிக்கு அடித்தளம்
உன்னை எவராலும் அசைத்து கூட பார்க்கமுடியாது
என் எனில் இது மேவிய நண்பர்கள் அரட்டை தளம்
வாழ்த்துவேன் உன்னையே ....
Title: Re: FTC இரண்டாம் ஆண்டு நிறைவு கவிதை
Post by: Varun on July 26, 2013, 12:43:42 PM
இரண்டு  வருடம் பூர்த்தி செய்யும் எங்கள் FTC  நாயகனே
இணையதளத்தில் இனையில்லாதவனே
உன் அரட்டை அரங்கில் எத்தனையோ கேலி கிண்டல்
மற்றும் அன்புப்பகிர்வுகள் உன்னை தேடி வந்தால்
மன அழுத்தம் தான் குறையுமே ...

பல நுறு நண்பர்களை எனக்களித்தவனும் நீயே
அடுத்தவர் உணர்வுகளை மதிப்பளிக்க
கற்றுத்தந்தவனும் நீயே

Forum என்று வந்துவிட்டால்
உலகத்து அனைத்து செய்திகளும் உன்னிடத்திலே
கலைஞர்களின் படைப்புகளை காவியமாக்குபவனே
FM  ,பாட்டு, இன்னும் பலவற்றை அமைதியாய் எமக்களித்தவனே

உனக்கும் உன்னை வழிநடத்துபவருக்கும்
நன்றிகள் பலகோடி நல்ல நண்பர்களை
தேடி தந்ததால் நீயும் என் நண்பனே
வாழ்க இன்னும் பல்லாண்டுகள்
வளர்க உன் இணைய சேவைகள்....

இணையத்தில் தமிழ் உறவுகள் இணைந்து உறவாட
உன்னை போல் ஒரு உறவு இல்லை என்ற
பெருமிதத்தோடு மென்மேலும் நீ வளர வாழ்த்துகிறேன்...

அயராது ஒலிக்கும் உன் வானொலி ,சலிப்பின்றி சாதிக்கும் உன் மன்றம்
திசை எங்கும்  இசையால் கட்டி போடும் பாடல் களஞ்சியம்
என உன் பக்கங்களை பதிவு செய்ய இந்த ஒரு பக்கம் எனக்கு போதாது.

வளர்க நீ...தமிழ் சுவை பருக எங்களுக்கு உன் சேவைகளை தொடர்ந்து தருக...
Title: Re: FTC இரண்டாம் ஆண்டு நிறைவு கவிதை
Post by: Gayathri on July 26, 2013, 09:28:32 PM
Nallthai kartu kettathai marakka
Anbodum panbodum palaga
Naatu nadappugal parti therinthu kolla
Baagu paadintri palagikolla
Arivuaatralai  velipadutha
Ragalaiyodu arattai adithu magila
Galatta panni kalaikka
Aanum pennum  natbodu palaga
Long time  friendship  needikka
Iniya uruvugal uruvakkum
Nanbaragal  arattai  arangam
Aayiram aayiram aandugal
Inainthu erukka
Yella  nalamum petru
Anaivar manathilum
Thodarum natpu
Havsam
Alavilla ananthathdoum
Latchiyathodum
Aandungal  pala kana
Manathara  valthukkirom....
Title: Re: FTC இரண்டாம் ஆண்டு நிறைவு கவிதை
Post by: _pLayeR_ on July 28, 2013, 04:20:51 AM
எட்டு திசையும் ஒலிக்கும்

எங்கள் FTC.

அதில் அறிவு ஊற்றாம்

எங்கள் இனிய நூலகம் .

பலவண்ண படைப்புகள்

பகுத்தறிவு இணை ப்புகள்

 இனிய சொற்போர்

இதயநெகிழ்ச்சி கவிதை

இன்னோரன்ன புதுமைகள்

 படைக்கும் எங்கள் ஈடிணையற்ற

தலைவனின் அறிவுசார் ஆக்கங்கள் புதுமை பெற்று

பொங்கி வழியும் இந்த போரும் இன்னும் பலநூறாண்டுகள்

மெருகு குலையாமல் என்றும் புது மணப்பெண்ணாய்

பொலிவோடு வளரவும் உச்சத்தை அடையவும் வாழ்த்துவோம்