FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on July 09, 2013, 02:52:31 AM
-
* மைதாமாவு -1கப்
* போன்விடா -5ஸ்பூன்
* சர்க்கரை -1கப்
* நெய்(அ)டால்டா -1/4கப்
* ஏலக்காய்பொடி -1/4ஸ்பூன்(விரும்பினால்)
* பாத்திரத்தில் 1ஸ்பூன் நெய்விட்டு மைதாமாவை நன்கு வறுக்கவும்.மாவு ஆறியவுடன் போnவிடாவை நன்கு கலந்துவைக்கவும்.
* மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.பாகு கொதிவரும்பொழுது சிறிது சிறிதாக மைதாமாவை தூவி கைவிடாமல் கிளறவும்.
* எல்லாமாவையும் சேர்த்தபிறகு நெய்(அ)டால்டா ஊற்றி,ஏலக்காய்பொடி போட்டு கிளறவும்.கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டுவரும்பொழுது நெய்தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியவுடன் கட்பண்ணவும்.