FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on July 08, 2013, 11:26:57 PM

Title: தித்திப்பான கேரட் சாதம்
Post by: kanmani on July 08, 2013, 11:26:57 PM
தேவையான பொருட்கள

கேரட் - 2 (பொரியது மற்றும் துருவியது)
அரிசி - 1 1/2 கப் (நீரில் ஊற வைத்து கழுவியது)
கிராம்பு - 2
ஏலக்காய் - 6
பட்டை - 2 இன்ச்
சர்க்கரை - 5-6 டேபிள் ஸ்பூன்
நட்ஸ் - 2 டேபிள் ஸ்பூன் (பாதாம், முந்திரி, உலர் திராட்சை போன்றவை)
பால் - 1 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
நெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய கேரட், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் சர்க்கரை மற்றும் அரிசி சேர்த்து, 2-3 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு பால் மற்றும் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, தீயை சற்று உயர்த்தி, 6-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

பின் தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சூப்பரான கேரட் சாதம் ரெடி!!!

இதன் மேல் நட்ஸ்களை தூவி அலங்கரித்து பரிமாறலாம்.