-
ஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த உணவுகள்
நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உடலில் பல நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். அதிலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அண்மையில் உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளின் மூலம் அல்சைமர் நோயைத் தடுக்க முடியும் என்பதற்கான சில சான்றுகள் உள்ளதாக தேசிய உடல்நல ஆராய்ச்சி மையம் (The National Institutes of Health) தெரிவித்துள்ளது.
தற்போது அல்சைமர் நோயானது அனைவருக்கும் தெரிந்த மிகக் கொடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து போவார்கள். மேலும் குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது. உண்மையிலேயே, அல்சைமர் நோயானது பரம்பரை காரணிகளுடன் தொடர்புடையது என்றாலும், இதர காரணிகளும் அல்சைமர் நோயை உண்டாக்கலாம் என்று உடல்நல நிபுணர்கள் கூறுகிறார்கள். அதில் சத்துணவு, கல்வி, நீரிழிவு நோய், உளவியல் செயல்பாடுகள், உடலியல் செயல்பாடுகள் போன்றவை அடங்கும். மேலும் அல்சைமர் நோயை, டிமென்ஷியா/முதுமை மறதி (dementia) என்றும் அழைப்பார்கள்.
இப்போது இந்த அல்சைமர் நோய்/ஞாபக மறதி நோயைத் தடுக்க உதவும் சில உணவு வகைகளைக் கீழே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதிலிருந்து விடுபடலாம்.
தானியங்கள் மற்றும் நட்ஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F05-1373001328-1-grains.jpg&hash=371b389d0a1967d68aea61c69f7eaf0ffc16b611)
தானிய வகைகள், குறிப்பாக கோதுமையானது புதிய செல் உற்பத்திக்கு உறுதுணையாக உள்ளது. மேலும் கோதுமையானது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பாதாம் பருப்பு, முந்திரி, மற்றும் வால்நட் ஆகிய நட்ஸ்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இன்றியமையா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவைகளும் புதிய செல் உற்பத்திக்கு உதவி புரிகின்றன.
-
கடல் சிப்பி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F05-1373001342-2-oysters.jpg&hash=b76a93bd6570fce09e161a6c86df089402ee381d)
நீங்கள் கடல் உணவு பிரியரா? அப்படியெனில் கடல் சிப்பிகளை அதிகம் சாப்பிடுங்கள். ஏனெனில் அவற்றில் துத்தநாகமும், இரும்புச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளன. இவை மூளையைக் கூர்மையாக்கும் மற்றும் மனதை ஒருமுகப்படுத்த பெரிதும் உதவும்.
-
ப்ளூபெர்ரி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F05-1373001398-3-blueberry.jpg&hash=2eae61f3cd7ac19de2dbf6f95366fd03febd16f6)
ப்ளூபெர்ரிக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகமாக உள்ளன. எனவே அவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கின்றன. மேலும் இப்பழம் வயதிற்கும், உடலிலுள்ள செல்களின் அளவுக்கும் உள்ள சமநிலையைப் பேணவும் மிகவும் உதவியாக உள்ளது.
-
செர்ரி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F05-1373001419-4-cherries.jpg&hash=93d6b6ef8ba6aba9feba4c3ae1c0c9960b7a7002)
செர்ரிப் பழத்தில் உடலுக்குத் தேவையான பண்புகள் அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் இதய நோய்கள் மற்றும் டிமென்ஷியா நோய் ஏற்படுவதைத் தடுப்பதில் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது.
-
மீன்கள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F05-1373001433-5-salmon.jpg&hash=ba26822e21338f42f78d8122b0a8669f6c65ba9d)
மீன்களில் குறிப்பாக சால்மன், சூரைமீன் போன்றவற்றை உண்பதன் மூலம், மூளை நன்றாக வளரும். ஏனெனில் மீன்களில் கால்சியமும், புரதச்சத்தும் நிறைந்துள்ளன. இவ்விரண்டு சத்துக்களும் மூளை வளர்ச்சிக்கு மிக அவசியமானவை. எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பது இன்றியமையாதது.
-
தக்காளி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F05-1373001448-6-tomato.jpg&hash=f1f0d78e52a7acd4350bc7f601ce01c8236cedb1)
தக்காளியில் லைகோபைன்கள் நிறைந்துள்ளன. இவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து உடலை பாதுகாக்கின்றன. மேலும் இவை டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன.
-
முட்டைகள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F05-1373001520-7-eggs.jpg&hash=58213ffd8402c103ed8ed57edec88d090785aa2a)
முட்டைகளில் வைட்டமின் பி12 மற்றும் கோலைன் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது. இவை மூளைச் செல்களின் உற்பத்தியைத் தூண்டி, நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையது.
-
ப்ராக்கோலி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F05-1373001542-8-broccoli.jpg&hash=2ab8901d4ba6174b0ebaef9cb226de4db04b2ae3)
ப்ராக்கோலியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் கே சத்தானது, மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது.
-
மாட்டுக்கறி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F05-1373001560-9-red-meat.jpg&hash=ea786991948823eaa9e59d2dbb7ebdfe8a913d2d)
கொழுப்பற்ற மாட்டுக்கறியானது இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ள ஒரு உணவாகும். இவை மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளை செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது. மேலும் இவை மூளையின் நியூரான்களின் கட்டமைப்பை மேம்படுத்துகின்றன.
-
தயிர்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F05-1373001572-10-curd.jpg&hash=8bb73e1123d65ae6410a61ebd4d617475efd02d1)
தயிரில் உள்ள அமினோ அமிலங்கள், மன இறுக்கத்தைக் குறைக்கின்றன. பொதுவாக மன இறுக்கம் அதிகமானால், மூளைச் செல்கள் சீக்கிரம் முதுமையடைந்து விடுகின்றனவாம். ஆகவே தயிரை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
-
சாக்லெட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F05-1373001592-11-chocolate.jpg&hash=4b771ddca5c36e3db5077d23e24b4b675928a8d5)
அதிகமான சாக்லெட்டுக்கள் சாப்பிடுவது, உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இருப்பினும், டார்க் சாக்லெட்டுகள் மூளைக்கு மிகவும் நல்லவை. இவற்றில் உள்ள ஃப்ளேவோனால்கள், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன.
-
காபி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F07%2F05-1373001609-12-coffee.jpg&hash=2f823d4497144ef6343522401b1b66932976cb08)
டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் காபி குறைக்கிறது. காபியில், காஃப்பைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. இருப்பினும் காபி உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டது என்பதால், காபியை அதிக அளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.