கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்! ! ! !(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/1044566_632111910140193_1358538244_n.jpg)
தினமும் சமையலுக்குக் கறிவேப்பிலையை உபயோகிக்கிறோம்.சாப்பிடும்போதோ அதை ஒதுக்கி வைக்கிறோம். கறிவேப்பிலையை அரைத்து, சாறெடுத்து, கடலை மாவில்கரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் இளநரை எட்டிப் பார்க்காது. கூந்தல் செழித்து வளரும்.
அதே போல 200 மி.லி. தண்ணீரைக் கொதிக்க வைத்து, கைப்பிடி கறிவேப்பிலை போட்டு மூடி வைக்கவும். ஆறியதும் அந்தத் தண்ணீரைக் குடித்தால் உடலிலுள்ளநச்சு நீர் வெளியேறி விடும். ஊளைச்சதை குறைந்து உடல் சிக்கென மாறும்.