FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Yousuf on October 30, 2011, 11:50:52 AM

Title: இதயத்தைக் கவர இனிய வழி!
Post by: Yousuf on October 30, 2011, 11:50:52 AM
இதயம்" நான்கு எழுத்துகள் கொண்ட அழகான ஓர் ஒற்றைச் சொல்.

நான்கு அறைகளைக் கொண்ட, உடம்பின் உன்னதமான உறுப்பு, இதயம். இதன் இயக்கம்தான் ஒவ்வொருவரையும் இயங்க வைக்கிறது. இயங்கிக் கொண்டிருப்பவர்கள்தான் மனிதர்கள்.

வெறும் இயக்கத்தை மட்டுமா இந்த இதயம் செய்கிறது? தவறான செயலைச் செய்து விட்டால், `உன்னிடத்தில் இதயமே இல்லையா? நீங்கள் இப்படிச் செய்யலாமா?’ என்று விழிகள் விரிய வினாக்கள் வரிசை வரிசையாக எழுவதையும் கேட்க முடிகின்றது.

இதயம் என்பது மனிதநேயத்தையும் இங்கே வெளிப்படுத்துகின்றது.

மனிதநேயமிக்க இதயத்தில் இடம் பிடிக்கவே ஒவ்வொருவரும் ஆசைப்படுகின்றோம். இதயத்தை வெல்வதற்கு இனிய வழி ஒன்று இருக்கின்றது. அதுதான் நாம் பேசும் வார்த்தைகள்.

பேச்சு என்பது வார்த்தைகளின் குவியல் அல்ல. பூக்களை அடுக்கி அடுக்கிக் கட்டப்பட்ட மாலை போல அது அழகாக இருக்க வேண்டும். அடுக்கிய புத்தகங்களைப் போல் முறையாக இருக்க வேண்டும்.

அழகு, அறிவு, திறமை, பதவி போன்ற நற்பண்புகள் வாழ்க்கைப் பயணத்தில் பலம் சேர்க்கலாம். இப்படிப்பட்ட பலங்கள் இருந்தும்கூட பலர் வெற்றியைத் தவற விட்டுவிடுகிறார்களே, என்ன காரணம்? வேறொன்றுமில்லை. அவர்களுடைய எண்ணங்களைச் சரிவர வெளிப்படுத்த அவர்களுக்குத் தெரியவில்லை.

இனிய இளைஞனே! யாரிடம், எப்படி, என்ன பேச வேண்டும் என்ற உத்திகளைச் சரியாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு, பிறரிடம் பேசும்போது அவர்களுக்குத் தைரியத்தையும், உற்சாகத்தையும் தரும் வகையில் வார்த்தைகளைப் போட்டுப் பேசுங்கள்.

ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்க முடியும். அல்லது அமைதியையும் அதனால் உண்டாக்க முடியும்.

இரண்டு அடிகளால் உலகத்துக்கு உன்னதக் கருத்துக்களை எடுத்துச் சொன்னவர் வள்ளுவப் பெருந்தகை. அவர் எழுதிய திருக்குறளில் `சொல்வன்மை’ என்கிற அதிகாரத்தில் பத்துக் குறட்பாக்களைப் பாங்காய்ப் படைத்துள்ளார்.

சொல்வன்மை, அதாவது சொல்லுகின்ற சொல் திறமைமிக்கதாக இருக்க வேண்டும். மற்றொரு சொல் அதை வெல்ல முடியாதபடி சரியான சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

அன்பான இளைஞர்களே! வாழ்க்கை நடத்துகிற தேர்வுகளில் வெற்றி பெறப் போகின்றவர்களே! வாழ்வின் பல்வேறு சூழல்களில் சுருக்கமாக, அழகாக, புரியும்படி உங்கள் கருத்துகளை முன்மொழியுங்கள்.

எதிரில் இருப்பவர்களின் முகபாவங்களை, எண்ண ஓட்டங்களை, வெளிப்பாடுகளைக் கவனிக்க வேண்டும். கண்களைப் பார்த்து நேருக்கு நேராகப் பேசும் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள். இது உங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை உண்டாக்கும்.

நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்லுகிறபோது எதிரில் இருப்பவர்களின் முகபாவம், உடல் அசைவுகள் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். எதிரிலிருப்பவர் என்ன நினைக்கின்றார் என்பதை உடலசைவுகள் வெளிப்படுத்தும். அதைத்தான் `உடல்மொழி’ என்கிறார்கள். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய இளைஞர்களிடம், கவனித்தல் திறன் குறைந்து கொண்டே வருகிறது என்கிறது ஓர் ஆய்வு. அடுத்தவர்கள் பேசும்போது அலட்சியமாக இருப்பது, அவர்கள் பேசுவதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் தம் கருத்தையே முதன்மைப்படுத்துவது என்றே இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

கவனித்தல் என்பது உங்கள் இதயத்தையும் ஈடுபட வைப்பதுதான். கவனித்தலில் புறக்கவனம், அகக்கவனம் என்ற இரண்டு வகை உண்டு. புறக்கவனம் என்பது கவனிப்பது போல் நடிப்பது. இதில் நேர்மையான கவனம் இல்லை. மனம் வேறு எங்கோ இருக்கும். மனமும், இதயமும் ஒருமித்துக் கவனிப்பதுதான் அகக்கவனம்.

இனிய சொல் இரும்புக் கதவைக் கூடத் திறக்கும் என்கிறது பல்கேரியப் பழமொழி. எனவே எப்போதும் இனிய சொற்களைச் சொல்லுவதில் கவனமாக இருங்கள்.

சொற்கள் காலம் கடந்து நிற்பவை. அதைப் புரிந்து கொண்டு அவற்றைப் பேச வேண்டும், எழுத வேண்டும் என்பார் கலில்ஜிப்ரான்.

இனிய இளைஞனே! அடுத்தவர்களின் இதயத்தை நீ வெல்ல வேண்டுமா? அதற்கு ஒரு வழி உண்டு. என்ன தெரியுமா? பேசும் வார்த்தைகள் உதட்டளவில் இல்லாமல் இதயத்திலிருந்து வர வேண்டும். இதுதான் இதயத்தைக் கவரும் இனிய வழி.
Title: Re: இதயத்தைக் கவர இனிய வழி!
Post by: RemO on October 30, 2011, 03:48:25 PM
thalaipa parthu fig ah crct pana idea koduthurupanu vantha ipadi emathitiye machi
Title: Re: இதயத்தைக் கவர இனிய வழி!
Post by: Yousuf on October 30, 2011, 04:27:53 PM
Ha Ha Remo mams ;D ;D
Title: Re: இதயத்தைக் கவர இனிய வழி!
Post by: gab on October 31, 2011, 02:07:41 AM
சொற்கள் காலம் கடந்து நிற்பவை. அதைப் புரிந்து கொண்டு அவற்றைப் பேச வேண்டும், எழுத வேண்டும்


Kandippa pesurathuku munnadi yosichu pesanum.Once varthaiya vitutu we cannot get it back.
Title: Re: இதயத்தைக் கவர இனிய வழி!
Post by: Global Angel on October 31, 2011, 03:51:08 AM
Quote
ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்க முடியும். அல்லது அமைதியையும் அதனால் உண்டாக்க முடியும்.

yes  sanda podaanum yaarkitayaahum  >:( 8) ilanaa saaptathu semikaathiyaa... thuukkamthan varathu ...rrrrr

nalla pathivu joseppu ;)
Title: Re: இதயத்தைக் கவர இனிய வழி!
Post by: Yousuf on October 31, 2011, 10:49:11 AM
Nandri Gab and angel!