FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 04, 2013, 08:41:01 PM

Title: ~ வீட்டில் இருந்தே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் ~
Post by: MysteRy on July 04, 2013, 08:41:01 PM
வீட்டில் இருந்தே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-f.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2Fq71%2F1001660_455717684523623_1818105373_n.jpg&hash=00944ecc9cb958f5b18479b50bf14e4904d623f6)


தற்போது இளம் தலைமுறையினருக்கும் இரத்த அழுத்தம் அதிகம் பாதிக்கிறது. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இரத்த அழுத்தம் பலரின் வாழ்வில் குடிகொண்டுள்ளது.
வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை கொண்டு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

100 கிராம் முலாம்பழ விதைகளுடன், 100 கிராம் கசகசாவை சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை வேளைகளில் 1 தேக்கரண்டி பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிராம்பை மென்று தின்று, வாயைக் கழுவ வேண்டும். மென்று தின்ன முடியாதவர்கள் தண்ணீர் சேர்த்து விழுங்கலாம்.

25-30 கறிவேப்பிலையுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து, சாறெடுத்து, வடிகட்டி காலையில் எழுந்தவுடன் குடிக்கலாம். சுவை பிடிக்காதவர்கள் சிறிது எலுமிச்சை சாறையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

கொத்தமல்லி அல்லது வெந்தய இலைகளையும் சாறெடுத்துப் பருகலாம். ஒருவர் தன் உடலுக்கு எது ஏற்றது என்று பரிசோதித்துப் பார்த்துப் பருக வேண்டும்.

1 தேக்கரண்டி தேனுடன், 1 தேக்கரண்டி இஞ்சி சாறு, 1 தேக்கரண்டி சீரகப்பொடி ஆகியவயற்றைக் கலந்து, காலை, மாலை இருவேளைகளில் அருந்தலாம்.

தன்னுடைய உடலுக்கு எது ஏற்றதென்று தெரிந்து கொண்டு அதை தினமும் பயன்படுத்தி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.