FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on July 02, 2013, 08:22:22 PM

Title: பெயரில் என்ன இருக்கிறது ?
Post by: Maran on July 02, 2013, 08:22:22 PM
பெயரில் என்ன இருக்கிறது ?


பொய்சாட்சி சொல்வதே
தொழிலாகக் கொண்டிருந்தார் அரிச்சந்திரன் ;

சொந்த ஊருக்கு மாற்றல் கோரியபோது
பத்தாயிரம் லஞ்சம் கேட்டார் காந்தி ;

அடுத்தவன் நிலத்தில் இரண்டடி ஆக்ரமித்து
வீடுகட்டியிருந்தார் கௌதமன் ;

தன் வீட்டு வெளிச்சம்
பக்கத்துக்கு வீட்டில் விழுவதைத் தடுக்க
சீக்கிரமே விளக்கை அணைப்பார் பாரி ;

ஊருக்கென்றால் உபதேசித்து
தனக்கென்று வந்தபோது கழுத்தறுப்பார் கண்ணன் ;

பெயரில் என்ன இருக்கிறது இப்போது
அழைக்கவும் அடையாளத்திற்கும் தவிர.

- Maran
Title: Re: பெயரில் என்ன இருக்கிறது ?
Post by: aasaiajiith on July 03, 2013, 07:51:31 AM
யதார்த்தங்கள்
மிக யதார்த்தமாய்
இழைந்திருக்கும்
யதார்த்தமான வரிகள் !

தொடர்ந்து எழுதிட‌
வாழ்த்துக்கள்!!!
Title: Re: பெயரில் என்ன இருக்கிறது ?
Post by: Gayathri on July 03, 2013, 01:52:50 PM
யோசிக்க வைக்கும் வார்த்தைகள்
நன்றி தொடர்ந்து  எழுத... :)
Title: Re: பெயரில் என்ன இருக்கிறது ?
Post by: பவித்ரா on July 08, 2013, 03:49:03 AM
வாழ்க்கைல பேருக்கும்  ஆளுக்கும் சமந்தமே இல்ல தம்பி அத அழகா சொல்லிருக்க தொடர்ந்து எழுதுங்க அருமையாக உள்ளது