-
சில இயற்கை வைத்தியங்கள்
உடலில் பிரச்சனைகள் ஏற்படும் போது, அதனை குணப்படுத்துவதற்கு சிறந்த வழியென்றால் அது இயற்கை வைத்தியங்கள் தான். பணத்தை செலவழித்து மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட, இயற்கை வைத்தியங்களை பின்பற்றினால், உடலில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, வேறு எந்த பிரச்சனையும் உடலைத் தாக்காமலும் தடுக்கும். ஆனால் கெமிக்கல் கலந்த மருந்து மாத்திரைகளை பின்பற்றினால், அது சில நேரங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தி, நிலைமையை இன்னும் மோசமாக்கச் செய்யும்.
இயற்கை வைத்தியம் என்றதும் வேறு ஏதோ ஒன்று என்று எண்ண வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு, உடலில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்துவதே இயற்கை வைத்தியமாகும். உடலில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்குவதற்கு நிறைய பொருட்கள் வீட்டிலேயே உள்ளன. அவை தயிர், ஆலிவ் ஆயில், இஞ்சி, சர்க்கரை, எலுமிச்சை மற்றும் பல பொருட்கள் உடல், சருமம் மற்றும் முடியில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்குவதற்கு பெரிதும் துணையாக உள்ளன.
உதாரணமாக, இஞ்சி சாப்பிட்டால், சளி, இருமல் போன்றவை குணமாகும். எலுமிச்சை எடையை குறைக்கவும், குமட்டலை தடுக்கவும் உதவியாக உள்ளது. இதுப்போன்று சில வித்தியாசமான பொருட்களைக் கொண்டு, பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். உதாரணமாக, உடலில் உள்ள மருக்களை போக்க டேப்-களை பயன்படுத்தலாம். அதேப் போன்று, சிலருக்கு பென்சில் கடிக்கும் பழக்கம் இருக்கும். இவ்வாறு கடித்தால், தலைவலி குறையும். இதுப் போன்று வேறு சில வித்தியாசமான இயற்கை வைத்தியத்தை அறிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில், படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வோட்கா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F19-1368933147-vodka-d-600.jpg&hash=24b05435118a68f5ad55b3529eef17f31c187d61)
வோட்காவைக் கொண்டு, துர்நாற்றம் வீசும் கால்களைக் கழுவினால், துர்நாற்றம் நீங்கிவிடும். வேண்டுமெனில் ஒரு துணியில் வோட்காவை நனைத்து, பாதங்களை துடைத்தாலும், பாதங்களில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.
-
டென்னிஸ் பால்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F19-1368933178-tennisball-600.jpg&hash=3cf2e42b386723e3a0cc1cbb7d7aa71a6e227f06)
இந்த சிறிய பந்தைக் கொண்டு கால் வலியைப் போக்கலாம். அதற்கு டென்னிஸ் பந்தை ஒரு துணியில் கட்டிக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.
-
வாயை சுத்தப்படுத்தும் திரவம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F19-1368933211-listerineds-60.jpg&hash=4d810695a23f0d30790b9288052324825b941538)
வாயை சுத்தப்படுத்தும் திரவமான, மௌத் வாஷ் கொண்டு, கால் விரல்களில் இருக்கும் பூஞ்ஜை மற்றும் பொடுகுத் தொல்லையை போக்கலாம். அதற்கு சிறிது மௌத் வாஷை நீரில் கலந்து, கால் விரல்களை அதில் ஊற வைத்து கழுவ வேண்டும். பொடுகை நீக்குவதற்கு, அதே கரைசலை தலையில் ஊற்றி மசாஜ் செய்து நீரில் அலச வேண்டும்.
-
சர்க்கரை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F19-1368933236-sugard-600.jpg&hash=88677ea22da110e82b706e6e8ebcf71c634f0bdd)
அடிக்கடி விக்கல் வருகிறதா? தண்ணீர் குடித்தும் தீர்வு கிடைக்கவில்லையா? அப்படியெனில் 1 டீஸ்பூன் சர்க்கரையை சாப்பிட்டால், உடனே விக்கல் நின்றுவிடும்.
-
தலைவலி மருந்து
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F19-1368933481-headachebalm-600.jpg&hash=d541b68ad65f91f16e3338109ef71b057270b141)
நல்ல மூலிகை வாசனை நிறைந்த தலைவலி மருந்தினை, சளி பிடித்திருக்கும் போது தடவினால், உடனே மூக்கடைப்பு நீக்கி ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
-
தலையணை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F19-1368933298-cushion-pillow-600.jpg&hash=34b109b39e2e7a670a98191b75eef8ec5b956d77)
முதுகு வலியால் அவஸ்தைப்பட்டால், அப்போது தலையணைக் கொண்டு சிறிது உடற்பயிற்சி செய்தால், முதுகு வலியானது குறைந்து, ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
-
பென்சில்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F19-1368933327-pencilbiting--600.jpg&hash=3472c71964aa6d4d8f652b5f481317f8411bab49)
அனைவருக்குமே பென்சில் கடிக்கும் பழக்கம் இருக்கும். இத்தகைய செயலை மன அழுத்தத்துடன் இருக்கும் போது சற்று முயற்சித்து தான் பாருங்களேன்.
-
டேப் மருக்கள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F19-1368933378-tapesd-600-.jpg&hash=287e5d4d1c472d78c62c6bdd9c9e15cd5fab3ee7)
உள்ள இடங்களில், டேப்பை ஒரு வாரத்திற்கு ஒட்டி வைத்து, பின் அதனை எடுத்து, மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு தேய்த்து, மீண்டும் டேப் கொண்டு ஒட்ட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து அவை போகும் வரை செய்தால், மருக்கள் சுத்தமாக போய்விடும்.
-
புதினா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F19-1368933407-mintd-600.jpg&hash=176b39d74baead720452d2a96d798be688e0568c)
புதினா இலைகள், வாயை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு, உடலில் உள்ள மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும். எனவே உடலில் எனர்ஜியை ஏற்ற வேண்டுமென்று நினைத்தால், சிறிது புதினா இலையை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.
-
தயிர்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F19-1368933428-curd-d-600.jpg&hash=dada36b7fe4479261db7bfc09de0d3c7efcea837)
இருப்பதிலேயே வாய் துர்நாற்றத்தை தான் சகித்துக் கொள்ள முடியாது. அதிலும் இதனைப் போக்குவதற்கு, நாள் முழுவதும் சூயிங் கம்மை மெல்லவும் முடியாது. ஆகவே இத்தகைய வாய் துர்நாற்றத்திற்கு ஒரு நல்ல தீர்வு என்றால், அது தயிர் தான். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்குவதற்கு தயிர் சாப்பிடுங்கள்.
-
காய்கறி எண்ணெய்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F05%2F19-1368933460-vegetableoild-600.jpg&hash=ea234ff174c39405363a88a8146ddd36c662d4fb)
விரல் நகங்கள் விரைவில் உடைந்தாலோ அல்லது பாதங்கள் அதிக வறட்சியுடன் இருந்தாலோ, அதனை சரிசெய்ய காய்கறி எண்ணெய் கொண்டு, தினமும் நகம் மற்றும் பாதங்களுக்கு மசாஜ் செய்து வந்தால், இந்த பிரச்சனையை குணமாக்கலாம்.