FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 02, 2013, 07:59:19 PM

Title: ~ நீலகிரி சிக்கன் குருமா ~
Post by: MysteRy on July 02, 2013, 07:59:19 PM
நீலகிரி சிக்கன் குருமா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2013%2F04%2F27-nilgirichickenkorma-600.jpg&hash=5d852f5c55658da2ad835bbbc7f12de58770787a)

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


அரைப்பதற்கு...:

சீரகம் - 1 டீஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
கசகசா - 1 டீஸ்பூன்,
பட்டை - 1 இன்ச்,
ஏலக்காய் - 2,
துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்,
முந்திரி - 8,
பச்சை மிளகாய் - 4,
கொத்தமல்லி - 3
டேபிள் ஸ்பூன் (நறுக்கியது),
புதினா - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது),
தண்ணீர் - 3 1/2 கப்


செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்துஇ 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 7-8 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு, 2 நிமிடம் பிரட்டி, 3 கப் தண்ணீரை ஊற்றி, 20-30 நிமிடம் மூடி வேக வைத்து இறக்க வேண்டும்

இப்போது சுவையாக நீலகிரி சிக்கன் குருமா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.