FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on July 01, 2013, 02:20:41 AM
-
எதிரி
******
ஒவ்வொரு சொல்லாடலின் விளிம்பிலும்
ஒட்டி உலர்ந்து கொண்டு தவிக்கிறது
நட்பின் பிரியாவிடை இதழ்கள் ..
மன்னிப்பின் கரங்கள்
நீண்டு நெடுந்தூரப் பயணத்துக்கு காத்திருந்தாலும்
நிகழ்ந்துவிட ஒரு நிகழ்வு
எட்ட முடியாத இடத்திற்கு
உன்னை அழைத்துச் சென்று விட்டது .
எதிரி என்ற ஸ்தானத்தில்
உன்னை அமர்த்தி ஊர்வலம் வர
உள் நெஞ்சம் விரும்பாத வேளையிலும்
நீ அமர ஆசைப் படும்
சிம்மாசனத்தை உணகளிப்பதே
என் நட்பின் இலக்கணம் என கொள்கிறேன் .
அனுதினமும் அருகிருந்து
நீ அனுமானிக்க கூடிய
குதர்க்க விளப்பங்களுக்கு
விளக்கம் சொல்லி ஓய்வதைவிட
அங்கேயே இரு ..
தீண்டப் படாத ஒரு மலர் என
வாசனை இல்லாத ஒரு புஸ்பம் என
தேன் கொடுக்காத ஒரு பூவென
என் முழுமைகள் ஓரம் கட்டப் படுகிறது உனக்கென,
அனைத்தும் கழுவித் துடைத்த
தென்றல் ஒன்று உன்னை கடந்து செல்லட்டும்
காலம் உன் கருத்தை மாற்றும் வரை
தூரமாகவே இரு எதிரியாய் ...
காத்திருப்பேன் அதுவரை
இந்த எதிரி தோழியாய் .