FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on June 30, 2013, 10:57:22 PM
-
தேவையான பொருட்கள்:
காராமணி - 1 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
கரம் மசாலாவிற்கு...
பட்டை - 2
பச்சை ஏலக்காய் - 3
கருப்பு ஏலக்காய் - 2
கிராம்பு - 5
மிளகு - 15
ஜாதிக்காய் - 1
செய்முறை:
முதலில் காராமணியை 4-5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் காராமணியை கழுவிப் போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்பு விசில் போனதும் குக்கரைத் திறந்து, காராமணியைக் குளிர வைக்க வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கரம் மசாலாவிற்கு கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு, 2-3 நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைக்க வேண்டும்.
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
இறுதியில் வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, அரைத்து வைத்துள்ள கரம் மசாலாவை தூவி கிளறி இறக்க வேண்டும். அடுத்து, அதனை பருப்பு மத்து கொண்டு கடைந்து பரிமாறினால், சூப்பரான காராமணி கடைசல் ரெடி!!!