(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1287.photobucket.com%2Falbums%2Fa621%2FMyTranquilize%2FImages%2Fkarukamani_zpsdcdf15fd.jpg&hash=ac6a01c250704589b2d484c5ff0e66ec95f4c90c)
'தாலி'யையாவது... சரி, அது மதம் சார்ந்த விஷயம்னும்... 'திருமணத்தில் கணவன்-மனைவிக்கு இடைப்பட்டது' என்றும் கொஞ்சமாவது ஆசுவாசப்பட்டு மனம் பொறுத்துக்கொள்ளலாம்.
ஆனால்... இந்த 'கருகமணி' இருக்கே..! இதுக்கும் இஸ்லாமிய மார்க்கத்துக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்பது மட்டுமல்லை மேட்டர்... அந்த கருகமணியை மணப்பெண்ணுக்கு யாரோ ஒரு வயசான பெண்மணி கட்டி விடுவார்..! பெரும்பாலும் மணப்பெண்ணின் மாமியார் செய்வார் இந்த வேலையை.
ஒருக்காலும் மணமகன் கட்டிவிட மாட்டார். 'அப்போ... கல்யாணம் யாருக்கும் யாருக்கும்'ன்னு இந்நேரம் இதை புதுசா கேள்விப்படுற யாருக்காவது சந்தேகம் வந்திருக்குமே..?
ஆமாம்... மூடநம்பிக்கையே வெட்கி தலை குனிந்து ஓடி விடும் அளவுக்கு 'கருகமணி' அவ்ளோ பெரிய மூடத்தனம்..! இப்போ பெரும்பாலும் அது ஒழிஞ்சிருச்சு..!